- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதியின் அரசியல் ஆட்டத்துக்கு செக் வைத்த சங்கீதா… வேட்பு மனு தாக்கலில் இப்படி ஒரு சிக்கலா?...

தளபதியின் அரசியல் ஆட்டத்துக்கு செக் வைத்த சங்கீதா… வேட்பு மனு தாக்கலில் இப்படி ஒரு சிக்கலா? – அப்செட்டில் தவெக கட்சி நிர்வாகிகள்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தின் தலைவராக நடிகர் விஜய் மேடைகளில் திமுக ஆட்சி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தனது எக்ஸ் பக்கத்தில் திமுகவை கண்டித்து பதிவுகள் செய்கிறார். ஆனாலும் உள்ளுக்குள் விஜய் பயங்கரமான மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் என்ற நிலையில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றது தான் விஜயின் அப்செட்டுக்கு முக்கிய காரணம். இது வெறும் கணவன் மனைவி இடையில் நடக்கும் குடும்பப் பிரச்னையாக மட்டுமின்றி விஜயின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் விவகாரமாக மாறியுள்ளது.

- Advertisement -

சினிமா நடிகராக விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை திரைக்குப் பின்னால் கண்டும் காணாமல் இருந்தது. ஆனால் இப்போது அவர் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர். அதற்கு தான் இப்போது சங்கீதா செக் வைத்துள்ளார். விவாகரத்து கேட்டு கோர்ட்டில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் பகிரங்கமாக சில குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

கணவருக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த நிலையில் அவரது செயல்பாடுகள் மன ரீதியான, பொருளாதார ரீதியான அழுத்தம் தந்தது என்று மனுவில் சங்கீதா கூறியிருக்கிறார். இந்த சூழலில் அரசியல் களத்தில் விஜய் சந்திக்க போகும் மிகப்பெரிய சிக்கல் இதுதான். தேர்தல் ஆணையம் விதிகளின்படி ஒரு வேட்பாளர் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்யும்போது மனைவியின் சொத்து விவரங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

- Advertisement -

அதற்கான படிவம் பார்ம் 26ல் மனைவியின் கையெழுத்தும் அவசியம். சங்கீதா இப்போது விஜயுடன் இல்லை. விவாகரத்து வழக்கு உள்ள நிலையில் விஜய் கேட்கும் ஆவணங்களில் சங்கீதா கையெழுத்து போடுவாரா என்பது சந்தேகம்தான். சங்கீதாவின் பெயரில் இருக்கும் சொத்துக்களை பட்டியலிடுவதில் ஏதேனும் குளறுபடி நடந்தால் அதுவே விஜயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பாகி விடும்.

அதனால் விஜய் தரப்பு வக்கீல்கள் இப்போது தீவிர ஆலோசனையில் இருந்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை எப்படியாவது நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்த்துவிடலாம் என்று தீவிரமாக முயற்சிக்கின்றனர். இதற்காக சங்கீதாவுக்கு செட்டில்மெண்ட் தர விஜய் தரப்பு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால் சங்கீதா தரப்பில், இதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர். கணவர் விஜய்க்கு அரசியலில் மிகப்பெரிய நெருக்கடியை அவரது மனைவி சங்கீதா ஏற்படுத்தி விட்டார் என்று தவெக கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்