- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு திடீரென நடந்த திருமண நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை யாருன்னு பாருங்க - அப்போ...

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு திடீரென நடந்த திருமண நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை யாருன்னு பாருங்க – அப்போ அவரு இல்லையா?

- Advertisement -

நடிகை வரலட்சுமி சரத்குமார், விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் அறிமுகமானார். இதுதான் விக்னேஷ் சிவனுக்கும் முதல் படம், வரலட்சுமி சரத்குமாருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்த போது சிம்புவுக்கும், வரலட்சுமிக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாக அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. அதில் உண்மையும் இருந்தது.

ஏனெனில் அந்த படத்தில், வரலட்சுமி சரத்குமாரும், சிலம்பரசனும் பல காட்சிகளில் மிக மிக நெருக்கமாக நடித்திருப்பார்கள். படுக்கையறை காட்சிகளும் மிக அதிகமாக இருக்கும். இதனால் அந்த படத்தில் நடித்த பிறகும், இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடுத்த சில மாதங்களில் இருவரும் பிரேக்கப் ஆகி விட்டனர்.

- Advertisement -

அதன்பிறகு வரலட்சுமி சரத்குமார் பல படங்களில் நடித்தார். குறிப்பாக சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை, மாரி 2, கன்னிராசி, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. இப்போது வரலட்சுமி சரத்குமார் தெலுங்கு படங்களில் அதிகமாக நடிக்கிறார். அவரது அம்மாவும், சரத்குமாரின் முதல் மனைவியுமான சாயாதேவி, பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன், நடிகர் சிம்புவுக்கும் வரலட்சுமிக்கும் திருமணம் செய்து வைத்து விடலாம் என சிம்பு தரப்பில் டி ராஜேந்தரும், வரலட்சுமி தரப்பில் சரத்குமாரும் முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் இரு வீட்டாரும் கலந்து பேசி முடிவு செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆனால் இந்த திருமணத்தில் சிம்பு தரப்பில் அவரது அம்மா உஷாவுக்கும், அதேபோல் வரலட்சுமி தரப்பில் அவரது அம்மா ராதிகா சரத்குமாருக்கும் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்ற தகவலும் அப்போதே பரவி வைரலானது. எனினும் சிம்புவுக்கும், வரலட்சுமிக்கும் வயது அதிகரித்துக் கொண்டே போவதால், இவர்கள் திருமணத்தை விரைவில் பேசி முடிப்பார்கள் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் என்பவரை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்ய இருக்கிறார். அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று மும்பையில் நடந்துள்ளது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 14 ஆண்டுகளாக நிகோலய் சச்தேவ், வரலட்சுமி இருவரும் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. சிம்புவை வரலட்சுமி மணந்துக்கொள்வார் என்பதும் பொய்த்து போனதால், சிம்பு ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்