- Advertisement -
Homeபொழுதுபோக்குஅம்பானி மகனுக்கு போட்டியா? நடிகர் ஜெயம் ரவிக்கு படத் தயாரிப்பாளர் பரிசளித்த வாட்ச் இத்தனை கோடியா?...

அம்பானி மகனுக்கு போட்டியா? நடிகர் ஜெயம் ரவிக்கு படத் தயாரிப்பாளர் பரிசளித்த வாட்ச் இத்தனை கோடியா? – ஓடாத படத்துக்கு ஓடுகிற வாட்ச் பரிசா?

- Advertisement -

மும்பையில், கடந்த ஒரு வாரமாக திருவிழா நடந்துக்கொண்டு இருக்கிறது. முகேஷ் அம்பானி இல்லத் திருமண திருவிழா களைகட்டியுள்ளது. தினம் தினமும் புத்தம் புது நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம், மார்ச் 3ம் தேதி நடந்தது. இப்போது அதையொட்டி விழா கொண்டாட்டம் நடந்து வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் மும்பை சென்று திரும்பியுள்ளனர். அதே போல் மைக்ரோசாப்ட் இணை இயக்குநர் பில்கேட்ஸ் உள்பட பெரிய தொழிலதிபர்கள், கிரிக்கெட் ஸ்டார்கள், பாலிவுட் நடிகர்கள், பெரிய அரசியல் தலைவர்கள் என பலரும் மும்பையில் அம்பானி வீட்டில் குழுமி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதாவது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தற்போது கையில் கட்டியிருக்கும் வாட்ச் தான் அது. அந்த வாட்ச்சின் விலை ரூ. 14 கோடி என்று சொல்லப்படுகிறது. இது கேட்பவர்களை எல்லாம் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு கடிகாரத்தின் விலை 14 கோடி ரூபாயா என்று பலரும் வாய்பிளந்து ஆச்சரியப்படுகின்றனர்.

அதுபோல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ஜெயம் ரவிக்கும், ஒரு படத் தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் விலை உள்ள ஒரு வாட்சை பரிசளித்திருக்கிறார். அதுதான் இப்போது கோலிவுட்டில் டாக் ஆப் டாப் ஆக இருந்து வருகிறது. இப்படி கோடிக்கணக்கில் அவர் செலவு செய்து வாட்ச் கொடுத்த நிலையில், அவர் ஜெயம் ரவியை வைத்த கடைசியாக இயக்கிய படம் ஓடவில்லை. ஓடாத படத்துக்கு இத்தனை கோடியில் வாட்ச் வாங்கி தந்திருக்கிறாரே என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாகவே ஜெயம் ரவி நடித்த பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனிப்பின்றி தான் வந்து செல்கிறது. பொன்னியின் செல்வன் படம் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கு கிடைக்கவில்லை. அகிலன், இறைவன், சைரன் என எந்த படமுமே ஓடவில்லை.

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் சைரன். இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்த படமும் சரியாக ஓடவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், படத்தின் ஹீரோ ஜெயம் ரவிக்கு ரூ. 1.5 கோடி ரூபாய் ( ஒன்றரை கோடி ரூபாய்) மதிப்புள்ள வாட்ச் பரிசளித்துள்ளார். இதில் மற்றொரு தகவல் சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவியின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்