நடிகை நிவேதா பெத்துராஜ், தூத்துக்குடியை சேர்ந்தவர். நிவேதா பெத்துராஜ் பிறந்தது தமிழ்நாடு என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாமே வெளிநாட்டில்தான். தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஒரு நாள் கூத்து, டிக்டிக்டிக், திமிரு பிடிச்சவன், பொதுவாக என் மனசு தங்கம், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
இவர் நடித்த படங்களில் ஜெயம் ரவியுடன் நடித்த டிக்டிக்டிக் மற்றும் விஜய் ஆண்டனியுடன் நடித்த திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் பெரிய அளவில் ஹிட் படங்களாக அமைந்தன. தமிழ், தெலுங்கு என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் நிவேதா பெத்துராஜ் பெரிய அளவில் முன்னணி நடிகையாக வரவேற்கப்படவில்லை. இதில் பொதுவாக என் மனசு தங்கம் என்ற படத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
படங்களில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், விளையாட்டு துறையில் அவர் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருவதாகவும், அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் சமீபமாக அவரை பற்றிய சில கடுமையான, விமர்சனத்துக்குரிய தகவல்களும் வந்துக்கொண்டு இருக்கின்றன.
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், நடிகை நிவேதா பெத்துராஜூக்கு, நடிகர் உதயநிதி ஸ்டாலின், துபாயில் ரூ. 50 கோடிக்கு துபாயில் பங்களா வீடு வாங்கிக் கொடுத்து இருக்கிறார். உதயநிதி மீது நிவேதா பெத்துராஜூக்கு பொசசிவ் இருக்கிறது என்று நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.
எனக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்யப்படுவதாக சமீபத்தில் தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த செய்திகளை பரப்பும் முன் சற்று யோசியுங்கள். நானும் என் குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். என்னை குறித்து இதுவரை பேசப்பட்ட எந்த தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
கடந்த 2002ம் ஆண்டு முதல் நாங்கள் குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறோம். நான் இதை சட்டரீதியாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் பத்திரிகைகளில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறது.அவர்கள் இப்படி என்னை அவதூறு செய்ய மாட்டார்கள் என்று இன்னும் நான் நம்புகிறேன் என்று நிவேதா பெத்துராஜ் பதிவிட்டுள்ளார்.





