- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் ஆண்டனி படத்துக்கும், தனுஷ் திரைப்படத்திற்கும் இடையே இப்படி ஒரு தொடர்பா... சூப்பர் சூப்பரா கண்டுபிடிக்கிறார்களே...

விஜய் ஆண்டனி படத்துக்கும், தனுஷ் திரைப்படத்திற்கும் இடையே இப்படி ஒரு தொடர்பா… சூப்பர் சூப்பரா கண்டுபிடிக்கிறார்களே பா…

- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது தனது 51வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த திரைப்படத்தை தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கி வருகிறார். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாகவும், நாகர்ஜூனாவுக்கு முக்கிய ரோல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் சிவராத்திரியை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது.

- Advertisement -

அதில் தனுஷ் பிச்சைக்காரன் கெட்டப்பில் இருந்தார். அடர்ந்த தாடியுடன் அழுக்கு சட்டை அணிந்து அவரது தோற்றமே வித்தியாசமான வகையில் இருந்தது. அதேசமயம் படத்திற்கு குபேரா என்றும் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்படி முதல் போஸ்டரே பலரும் பேசும் வகையில் அமைந்தது.

இப்படியான சூழலில் அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது குபேரா திரைப்படத்தில் தனுஷிற்கு இரண்டு கெட் அப்களாம். அதில் ஒன்று பிச்சைக்காரன், மற்றொன்று கோடீஸ்வரர் கதாபாத்திரமாம். இதைக் கேட்டவுடன் பலருக்கும் பிச்சைக்காரன் திரைப்படத்தின் ஞாபகம் வருவதாக கூறுகின்றனர்.

- Advertisement -

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்த அந்த திரைப்படத்தில், அவரும் பணக்காரனாக இருக்க தனது தாயின் உடல் நிலை சரிவர நேர்த்திக்கடன் வேண்டி பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் சுற்றித்திரிவார். தற்போது தனுஷ் அந்த மாதிரி கதையில் தான் நடிக்க போகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேசமயம் இது மும்பையில் உள்ள தாராவியை சுற்றி நடக்கும் கதை என்றும், அரசியல் களத்தில் கேங்ஸ்டர் பாணியில் இந்த படம் உருவாவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் நாகர்ஜுனா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். கன்டன்ட் ரீதியாக இந்த திரைப்படம் மிகவும் பலமாக இருக்கும் என்றே பேசப்பட்டு வருகிறது. இதனால் நிச்சயம் குபேரா திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றாது என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்