நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங், அடுத்து ரஷ்யாவில் நடக்க உள்ளது. இந்த மாதம் 31ம் தேதியுடன் படப்பிடிப்பு முடிந்த பிறகு, போஸ்ட் புரடக்சன் பணிகளை, இயக்குனர் வெங்கட்பிரபு கவனித்துக்கொள்கிறார். விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் பணிகளில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த படத்தில் விஜயுடன் முக்கிய ஸ்டார்கள் நடிகர்களும் நடித்திருக்கின்றனர். பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சுதீப் போன்றவர்கள் நடித்துள்ளனர். இவர்கள் நான்கு பேருமே ஹீரோ நடிகர்கள்தான். அதிலும் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக இருந்த நடிகர் பிரசாந்த், இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக சினிமாவை விட்டு விலகியிருந்த பிரசாந்த், இந்த படத்துக்கு மட்டும் தயங்காமல் ஓகே சொல்லி இருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம், இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்த படத்தில் படத்தின் ஹீரோ விஜய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ, அதே முக்கியத்துவம் பிரசாந்த் கேரக்டருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதையறிந்த பிறகுதான், இந்த படத்தில் ஆர்வமாக நடிக்க முன்வந்து இருக்கிறார் நடிகர் பிரசாந்த்.
அதுமட்டுமின்றி வழக்கமாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில், மற்ற நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைக்கவும், அவருக்கான முக்கியத்துவத்தை தவிர்க்கவும், ஹீரோ நடிகர்கள் டைரக்டரை ரகசியமாக கேட்டுக்கொள்வர். ஆனால் இந்த படத்தை பொருத்த வரை, பிரசாந்த் சம்பந்தபட்ட காட்சிகளை நல்ல முறையில் கொண்டுவர விஜய், நல்ல முறையில் ஒத்துழைப்பு தந்து கெத்து காட்டியிருக்கிறார்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த போது, அதில் வில்லன் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதிக்கு சில காட்சிகளில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதுபற்றி எந்த முகம் சுளிப்பும் காட்டாமல், அவருக்கு அந்த காட்சிகளில் நல்ல ஒத்துழைப்பு தந்து நடித்து, அவருக்கு வில்லன் கேரக்டரில் சிறப்பாக இடம் கிடைக்கச் செய்தவர்தான் விஜய்.
அதே போல் இந்த படத்திலும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் அந்த படத்தின் ஹீரோவாக நல்ல முறையில் சப்போர்ட் செய்திருக்கிறார் விஜய். விஜய் காட்டிய பெருந்தன்மையால் பிரசாந்த் கோட் படத்தில் வேற லெவலில் இருப்பார். அதனால் கோட் படத்துக்கு பிறகு பிரசாந்த் அதிக படங்களில் நடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவரது தந்தை தியாகராஜன், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.





