- Advertisement -
Homeபொழுதுபோக்குபில்டப் ராணியாக மாறிவிட்ட அன்னபூரணி, அதல பாதாளத்துல மார்க்கெட் விழுந்தும் இவங்க அலப்பரை தீரலையே? -...

பில்டப் ராணியாக மாறிவிட்ட அன்னபூரணி, அதல பாதாளத்துல மார்க்கெட் விழுந்தும் இவங்க அலப்பரை தீரலையே? – நயன்தாரா உருட்டுல நடுங்கிப் போன ரசிகர்கள்

- Advertisement -

நடிகை நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என முதலில் அழைக்கப்பட்டவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகை விஜயசாந்தி தான். ஏனெனில் 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் மிக அதிரடியாக, ஆக்‌ஷன் காட்டி நடித்திருந்தார். அந்த பட்டத்தை தான் நயன்தாரா பயன்படுத்தி வருகிறார்.

பொதுவாகவே சினிமா நடிகைகளின் மார்க்கெட் என்பது ஒரு கட்டத்தில் சரியும். இமேஜ் குறையும். நாயகியாக நடித்தவர்களே அக்கா கேரக்டரில், அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எத்தனையோ அழகான நாயகிகள், ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு, அதே ஹீரோவுக்கு அம்மாவாக, அக்காவாக நடித்திருப்பர்.

- Advertisement -

இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது. ஆனால் நயன்தாரா போன்றவர்கள் தங்களுக்கு 70 வயதானாலும் இதே போன்ற இமேஜூடன், இதே மாஸ் காட்டி, பில்டப் காட்டி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வரலாம் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர். இதற்கெல்லாம் காலம் விட்டு வைக்காது. முதுமை வந்து முக்காடு போட வைத்துவிடும் என்பதை அவர் உணர வேண்டும்.

நடிகை நயன்தாராவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல மார்க்கெட் இருந்தது. அவரது படங்களும் வெற்றி பெற்றன. அதாவது கதாநாயகியை மையப்படுத்திய சில படங்களில் நயன்தாரா நடித்தார். அந்த படங்களும் வெற்றி பெற்றன. ஆனால் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு, நயன்தாராவின் மார்க்கெட் அதலபாதாளத்தில் கிடக்கிறது. அன்னபூரணி படம் ஓடவில்லை. இந்தியில் அவர் நடித்த ஜவான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றும், இந்தியில் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வரவில்லை.

- Advertisement -

இந்நிலையில் சில விளம்பரங்களில் நடித்துள்ள நயன்தாரா, இந்த விளம்பரம் ஒன்றில் நடிக்க ரூ. 50 கோடி சம்பளம் பெற்றதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ஒரு நிமிட விளம்பர காட்சியில் நடிக்க அவருக்கு ரூ. 50 கோடி சம்பளமா என பலரும் திகைத்து போய்விட்டனர். ஆனால் ஒரு படத்தில் நடிக்கவே அவர் ரூ. 12 கோடி வரைதான் சம்பளம் பெறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

இதில் உண்மை என்னவென்றால், நயன்தாரா அந்த விளம்பரங்களில் நடிக்க வாங்கிய சம்பளம் சில கோடி ரூபாய்கள்தான். ஆனால் 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக, ஒரு பெரிய உருட்டை உருட்டி விட்டுள்ளனர். இதற்கு காரணம், ஒரு விளம்பரத்தில் நடிக்க இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக தருகிறார்கள் என்றால், நயன்தாரா மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது என்றுதான் அர்த்தம் என, ஏமாந்து போய் தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக பணத்தை வாரிக்கொடுத்து, தங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என, வாசலில் தவம் கிடப்பார்களே என்ற நயன்தாராவின் நப்பாசைதான் இதற்கு உருட்டுக் காரணம் என சமூக வலைதளங்களில் கமெண்டுகள் அனல் பறக்கிறது.

- Advertisement -

சற்று முன்