நடிகை நயன்தாரா, துவக்கத்தில் ஹீரோவுடன் டூயட் பாடும் ஒரு சராசரி நாயகியாக தான் அறிமுகமானார். பல படங்களில் எக்குத்தப்பான கவர்ச்சி காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். தனது முதல் அறிமுக படமான ஐயா படத்தில் தாவணி பாவாடையிலும், சில காட்சிகளிலும் புடவைகளிலும் மிக அம்சமான ஒரு தோற்றத்தில் அசத்தினார். ஆனால் ஒரு கட்டத்தில் அது மாறிப்போனது. பல படங்களில் அதீத கவர்ச்சி காட்டினார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிறகும், அதற்கு முன்பும் நயன்தாராவின் பல படங்கள் சரியாக போகவில்லை. அதுவும் அவரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதாநாயகிகள் சப்ஜெக்ட் படங்களாகவும் அவை இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம், அவருக்கான கதைகளாக அந்த படங்கள் இல்லாததுதான்.
இந்நிலையில் நயன்தாரா, இந்திக்கும் ஒரு விசிட் போய் வந்தார். அங்கு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நடித்தார். படத்துக்காக தேவையான கிளாமரும் காட்டியிருந்தார். படமும் மிகப்பெரிய ஹிட்தான். 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது. ஆனால் அதன்பிறகு நயன்தாராவுக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை.
இதைத்தொடர்ந்து தனது 75வது படத்தில் நடித்தார் நயன்தாரா. அன்னபூரணி என்ற இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் செய்தார். படம் பிளாப் ஆனது. அன்னபூரணி படம் தோல்வியடைந்தது மட்டுமின்றி சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. அதில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக, நெட்பிளிக்ஸில் இருந்து அந்த படமும் நீக்கப்பட்டது. நயன்தாராவும் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி தொடர்ந்து தோல்வி படங்களை தரும் நயன்தாராவுக்கு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. குறும்படங்களை இயக்கிய புதுமுக இயக்குனர் செந்தில் என்பவர்தான் அந்த புதிய படத்தை இயக்குகிறார். யானை, காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படங்களை தயாரித்த பட நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்க நயன்தாரா 11 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.
சமீபகாலமாக புதுமுக இயக்குனர்கள் படங்களில் நடிக்க உடனே ஒத்துக்கொள்ளும் நயன்தாரா குறித்த மற்றொரு உண்மையும் வெளிவந்துள்ளது. என்னவெனில், புதுமுக இயக்குனர்களுக்கு 10லட்சம் 15 லட்சம் என்றுதான் சம்பளம் தருவதால், அவர்களது சம்பளத்தையும் சேர்த்து பல கோடிகளில் நயன்தாரா வாங்கி விடுகிறாராம். பெரிய இயக்குனர்கள் என்றால் அது முடியாது என்பதால் அறிமுக இயக்குனர் எனில் உடனே நயன்தாரா ஓகே சொல்லி விடுகிறார் என்றும் கூறப்படுகிறது.





