தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. துவக்கத்தில் ஹீரோக்களுக்கு ஜோடியாக குத்தாட்டம் போடவும், அவ்வப்போது கண்ணீர் விட்டு அழுது பேசவும் படங்களில் கமிட் ஆன நயன்தாரா, ஒரு கட்டத்தில் தூக்கலான கவர்ச்சியில் ரசிகர்களை வசீகரித்தார். அதனால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் சில ஆண்டுகளுடன் முனணனி நடிகையாக மாறினார்.
இதற்கிடையே கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்த அவர், ரசிகர்களின் மத்தியில் தனி கவனம் பெற்றார். அறம், இமைக்கா நொடிகள், இந்தியில் ஜவான் போன்ற படங்களில் நடித்த போது அவரது சம்பளம் கணிசமாக உயர்ந்தது. கடைசியாக அவரது 75வது படம் அன்னபூரணியில் நடித்த போது நயன்தாராவின் சம்பளம் 10 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரை அதிகரித்திருந்தது.
ஆனால் சமீபகாலமாக, நயன்தாராவின் படங்கள் எதுவும் சரியாக போகாத நிலையிலும், அவரது சம்பளத்தை அவர் குறைக்கவில்லை. இப்போதும் புதிய படத்தில் நடிக்க, அவர் ரூ. 10 கோடி முதல் ரூ. 11 கோடி வரை சம்பளம் கேட்கிறார். அந்த சம்பளத்தை தரவும் தயாரிப்பாளர் முன்வருவதால் அவர் மார்க்கெட் சரிந்த நிலையிலும், அதே சம்பளத்தை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நடிகை திரிஷாவும் இப்போது நயன்தாரா போல பிஸியான நடிகையாக மாறிவிட்டார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் இமேஜ் தாறுமாறாக எகிறி விட்டது. மலையாளத்தில் 2 படங்கள், தெலுங்கில் 3 படங்கள், தமிழில் 2 படங்கள் என மிக பிஸியாக திரிஷா நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில் நடிப்பதற்காக திரிஷா, 11 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் இதுவாக தான் இருக்க முடியும் என்று விவரமறிந்த தமிழ் சினிமா துறை சார்ந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். மணிரத்னம் பெரிய டைரக்டர் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், சம்பள விஷயத்தில் அவர் எப்படிப்பட்டவர் என உண்மை தெரியாமல் உருட்டுகின்றனர் என புலம்புகின்றனர்.
மணிரத்னத்தை பொருத்தவரை, தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர் நடிகையர், மார்க்கெட் நிலவரப்படி என்ன சம்பளம் வாங்குகிறார்களே அதில் பாதியை குறைத்து விடுவார். மிகவும் வற்புறுத்தினால் சில சதவீதங்கள் சம்பளம் சேர்த்து தருவார். மற்றபடி அவரது படங்களில் நடிப்பவர்களுக்கு மணிரத்னம் தருவது அடிமாட்டு சம்பளம்தான். அந்த உண்மை தெரியாமல், தக்லைப் படத்தில் நடிக்க திரிஷாவுக்கு ரூ. 11 கோடி சம்பளம் தந்ததாக சிலர் புரளியை கிளப்பி விட்டுள்ளது, தெரிய வந்துள்ளது.





