நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அப்பா, மகன் என்ற 2 கேரக்டர்களில் நடித்து வருகிறார். அப்பா விஜய்க்கு சினேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சௌத்ரியும் ஜோடியாக நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் ஆகியோர் ரீ என்ட்ரி ஆகியுள்ளனர்.
இந்த படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டன. கடந்த சில வாரங்களாக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விஜய் நடித்த முக்கிய காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. அப்போது தினமும் விஜயை நேரில் பார்க்க திரண்ட ரசிகர் கூட்டம், அவர்களுடன் கேரவன் வேன் மீது ஏறி நின்று செல்பி எடுத்த விஜய், வீடியோ காட்சிகள் தொடர்ந்து வைரலாகி வந்தன.
இதைத் தொடர்ந்து தற்போது துபாய் வழியாக நடிகர் விஜய், ரஷ்யா சென்றுள்ளார். அங்கு 16 நாட்கள் விஜய் நடிக்கும் படத்தின் முக்கிய காட்சிகள் ஷூட் செய்யப்படுகின்றன. அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைய இருக்கிறது. அதன்பின்பு ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டு தினத்தில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது.
அதன்பிறகு ஆகஸ்ட் 10 முதல் 13 தேதிக்குள், ஆகஸ்ட் 16 முதல் 20ம் தேதிக்குள் கோட் படம் ரிலீசாக இருக்கிறது. அதற்கு முன்பாக ஜூன் 22ம் தேதி விஜய் நடிக்கும் அடுத்த படம் விஜய் 69 படத்தின் துவக்க விழா மற்றும் படப்பிடிப்பை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை டைரக்டர் எச் வினோத் டைரக்ட் செய்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கப் போகிறது.
இந்நிலையில், கோட் படத்தில் சமீபத்தில் ஒரு திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக இதுவரை பணிபுரிந்தவர் சித்தார்த்தா நூனி. இவர் கேப்டன் மில்லர் படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தவர். அதன்பின், கோட் படத்தில் ஒளிப்பதிவாளராக செயல்பட்டார்.
ஆனால் இயக்குனர் வெங்கட்பிரபுவின் மிக நெருங்கிய நண்பர் சக்தி சரவணன், ஒளிப்பதிவாளராக தொடர்ந்து அவரது படங்களில் பணிசெய்தவர். ஆனால் கோட் படத்தில் பணிபுரியவில்லை. இது நண்பர்கள் இருவருக்குமே பெரிய ஏமாற்றமாக, இழப்பாக இருந்தது. இந்நிலையில் திடீரென சித்தார்த்தா நுானி, கோட் படத்தில் இருந்து விலகிவிட, அவருக்கு பதிலாக சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராக கோட் படத்தில் நியமிக்கப்பட்டு விட்டார். இது தற்செயலாக நடந்ததா, பின்னணியில் எதுவும் அரசியல் நடந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் தன் நண்பன் தன்னுடன் பணிசெய்வதில் வெங்கட்பிரபு மிக உற்சாகமாக படப்பிடிப்பில் இருந்து வருகிறார்.





