- Advertisement -
Homeபொழுதுபோக்கு500 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், அது நடக்காது; வேற லெவலில் இப்போதும் நடிகர் ராமராஜன்-...

500 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், அது நடக்காது; வேற லெவலில் இப்போதும் நடிகர் ராமராஜன்- ரஜினி, கமல் கூட இப்படி இல்லையே?

- Advertisement -

நடிகர் ராமராஜன் தமிழ் சினிமாவில் மக்கள் நாயகனாக மதிக்கப்பட்டவர். 1980, 90களில் நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர். கிராமப்புற படங்கள் என்றாலே அது ஹிட் படங்களாக மாற, ராமராஜன் நடித்திருந்தால் போதும். அதிலும் இளையராஜா இசை, கவுண்டமணி செந்தில் காமெடி, கங்கை அமரன் படம் என்றாலே அது 100 நாள் படம்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

மனிதன் படத்தில் ரஜினியும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலும் நடித்து வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த நேரத்தில், தலையில் ஒரு கரகத்தை வைத்துக்கொண்டு மாங்குயிலே, பூங்குயிலே என பாடி, கமல் ரஜினியை விடவும் வசூலில் பலத்த சாதனை புரிந்தவர் ராமராஜன். அதனால் ராமராஜன் படங்களை பார்த்து ரஜினி, கமலுக்கு கொஞ்சம் எரிச்சலாக தான் அப்போது இருந்திருக்கும்.

- Advertisement -

நடிகர் ராமராஜன், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகர். சினிமாவில் ஜெயித்த பிறகு, ஜெயலலிதாவின் அன்பை பெற்றார். அவரது ஆட்சி காலத்தில் ராஜ்ய சபா எம்பியாகவும் ராமராஜன் இருந்தார். அரசியலில் ஆர்வம் காட்டியதால், படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

அப்போது ஒருமுறை, தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் காரில் திரும்பிய போது மதுரை அருகே விபத்து ஏற்பட்டது. இதில் கார் டிரைவர் அதே இடத்தில் இறந்துவிட, பலத்த காயங்களுடன் ராமராஜன் உயிர் பிழைத்தார். பிறகு மதுரை மருத்துவமனையில் பல நாள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் ஓரளவு குணமடைந்தார். ஆனால் தொடர்ந்து சினிமாவில் அவர் நடிக்க முடியவில்லை.

- Advertisement -

இப்போது பல ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ராமராஜன் சாமானியன் என்ற படம் மூலம் ரீ என்ட்ரி தருகிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் ராமராஜன் சில விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.

ராமராஜன் பேசுகையில், எல்கேஜி படத்தில் நடிக்க ஆர்ஜே பாலாஜி அழைத்தார். பார்ட்டி படத்தில் நடிக்க வெங்கட்பிரபு அழைத்தார். ஆனால் நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டேன். 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் சிகரட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஹீரோவாக நடித்தால், நல்லது செய்பவனாக, நல்ல மனிதனாக நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். எம்ஜிஆரை போலவே, ராமராஜனும் இந்த கொள்கையை பின்பற்றுவது தமிழ் ரசிகர்களுக்கு அவர் காட்டும் ஒரு நல்வழிதான்.

- Advertisement -

சற்று முன்