- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் நாயகனுக்கு கிடைத்த வரவேற்பு, உலகநாயகனுக்கு கிடைக்கலையே, அவரோட அந்த ஆசைதான் இதுக்கு காரணம் -...

மக்கள் நாயகனுக்கு கிடைத்த வரவேற்பு, உலகநாயகனுக்கு கிடைக்கலையே, அவரோட அந்த ஆசைதான் இதுக்கு காரணம் – போட்டுத்தாக்கிய முக்கிய பிரபலம்

- Advertisement -

நடிகர் கமல் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த படம் இந்தியன். இந்த படம் 1996ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தியன் தாத்தா என்ற ஒரு பெயரையே கமல்ஹாசனுக்கு பெற்றுத் தந்தது. டைரக்டர் ஷங்கர் இயக்கிய மிக தரமான படங்களின் வரிசையில், முதல்வன் படம் போல இந்தியன் படமும் மிக முக்கியமானது.

இந்த படத்தில் அதிகரித்துப் போன லஞ்சம், ஊழல் குறித்து மையப் பொருளாக படத்தை பேச வைத்திருப்பார் ஷங்கர். இதில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் இந்தியன் தாத்தாவாக கமல் அசத்தியிருப்பார். சுதந்திரப் போராட்ட கால வீரனாகவும், வர்மக்கலை கற்ற போர்க்குணம் கொண்டவராகவும் கமல் நடிப்பில் அதகளம் செய்திருப்பார்.

- Advertisement -

ஆனால் இந்த படம் வந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2, இந்தியன் 3 படங்களை இயக்கி இருக்கிறார் ஷங்கர். இந்த படங்களும் அதே லஞ்சம் ஊழல் குறித்துதான் பேசியிருக்கிறது. அதே நேரத்தில் இந்த படத்துக்கான வரவேற்பு, இன்றைய 2 கே கிட்ஸ் மத்தியில் கிடைக்குமா, என்ற சந்தேகத்தை பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இந்தியன் படம் வெளியாகி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஆனால் இன்றைய சூழ்நிலையில், அன்று 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவர்கள், இன்று ஒரு லட்சம் லட்சம் வாங்குபவர்களாக மாறி இருக்கின்றனர். அதனால் லஞ்சம் என்பது புரையோடி சமுதாயத்தில் இரண்டறக் கலந்து விட்டது.

- Advertisement -

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2, இந்தியன் 3 படங்கள் லஞ்ச லாவண்யங்கள், ஊழல் குறித்து பேச வருகின்றன. அதில் கமல்தான் ஹீரோ. இப்போது கமல் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார். லஞ்சம் ஊழல் நிறைந்த கட்சி என விமர்சிக்கப்படும்ல ஊழலுக்கு பெயர் பெற்ற திமுக கூட்டணியில் இந்த தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படி திராவிட கட்சிகளை ஆதரிக்கும் ஒருவர், லஞ்சம் ஊழல் குறித்த படத்தில் நடித்தால், ரசிகர்கள் மத்தியில் எடுபடுமா என்பது கேள்வியாக உள்ளது. சமீபத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்கும் சாமானியன் படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களை தெறிக்க விட்டது. ஆனால் இந்தியன் 2 குறித்த பிரமோவுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த ஆர்வமும் வெளிப்படவில்லை, என்று உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் பத்திரிகையாளர் அந்தணன்.

- Advertisement -

சற்று முன்