- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரதீப் ரங்கநாதனுக்கு இப்படி ஒரு ஆசையா… என்னய்யா நடக்குது இங்கே? - கலாய்த்து தள்ளும்...

பிரதீப் ரங்கநாதனுக்கு இப்படி ஒரு ஆசையா… என்னய்யா நடக்குது இங்கே? – கலாய்த்து தள்ளும் நெட்டிஷன்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் ஓரிரு படங்களில் நடித்து, வெற்றி பெற்று விட்டால், அவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடிவதில்லை. அதிலும் குறிப்பாக, சமீப காலமாக ஓரிரு படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விட்டால், அதில் ஹீரோவாக, ஹீரோயினாக நடித்தவர்கள் தலையில் கொம்பு முளைத்தது போல் நடந்து கொள்வது ரசிகர்களை அதிருப்தி அடைய வைக்கிறது.

அதேபோல் ஓரிரு படங்கள் ஹிட் கொடுத்துவிட்டால் 7 கோடி, 8 கோடி, 10 கோடி என்று சம்பளம் கேட்பதும் தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை மிரள வைக்கிறது. கோமாளி படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்து இயக்கிய படம் லவ் டுடே. இந்த படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளம் காதலர்களின் எமோஷனல்களை மையப்படுத்திய இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஹீரோ மற்றும் டைரக்டர் பிரதீப் ரங்கநாதன்.

லவ்டுடே படம் ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அதன்பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்துவிட்டார். அதே போல் அடுத்த படத்தை இயக்கவும் அவர் ஆர்வம் காட்டவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் தனது சம்பளத்தை கணிசமான உயர்த்தும் திட்டத்தில், காலத்தை கடத்தினார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு சம்பளம் ரூ 15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் படங்களிலும் தனது சம்பளம் ரூ. 15 கோடியாக இருக்கும் என்று அவர் கூறி வருகிறார். இப்படி ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டு அநியாயமாக பன்மடங்கு சம்பளம் கேட்பது பலருக்கும் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் என்ற தனது நீளமான பெயரை, பி ஆர் என்று சுருக்கி கொண்டுள்ளார். இதனால் எல்ஐசி படக்குழுவினர் அவரை பி ஆர், பி ஆர் என்று குறிப்பிட்டு அழைத்து வருகின்றனர். எம்ஜிஆர், எஸ் எஸ் ஆர், டி ஆர், எஸ் டி ஆர் என்ற வரிசையில் இப்போது புதிதாக பி ஆர் சேர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஒரு படம் டைரக்ட் பண்ணினார். ஒரு படம் நடித்து ஹிட் கொடுத்தார். அதற்கு இத்தனை அலப்பறையா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்