- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இருக்கும்; போடு வெடிய, விஜய்க்கு...

வரும் சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இருக்கும்; போடு வெடிய, விஜய்க்கு போட்டியாக களம் இறங்குகிறாரா நடிகர் விஷால்?

- Advertisement -

நடிகர் விஷால் திமிரு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அவர் நடித்த சண்டக்கோழி, திமிரு, செல்லமே, நான் சிவப்பு மனிதன், தாமிரபணி போன்ற பல படங்கள் வெற்றி பெற்றன.

விஷால் ஆரம்பத்தில் இருந்தே நல்ல கதாநாயகனாக தன்னை வெளிப்படுத்திய நிலையில், ஒரு கட்டத்தில் தனக்குள் இருக்கும் அரசியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்த தொடங்கினார். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க நிர்வாகி போன்ற பொறுப்புகளுக்கு வந்தார்.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன், சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்பி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் வேட்புமனுவில் நிறைய தவறுகள் இருந்ததால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. என்றாலும் அவரும் அரசியல் குறித்த ஆர்வத்தில் இருக்கிறார் என்பதை அவ்வப்போது பேசும்போது வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி 2ம் தேதி துவக்கினார். அதுகுறித்து அப்போது பேசிய விஷால், நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி எனது மக்கள் நல இயக்கம் சார்பில், என்னால் இயன்ற உதவிகளை நான் மக்களுக்கு செய்து கொண்டே தான் இருப்பேன். ஆனால் வரும் காலகட்டத்தில் இயற்கை ஏதேனும் என்னை முடிவெடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களில் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்

- Advertisement -

சென்னை வடபழனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறுகையில், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் கண்டிப்பாக இருக்கும். தமிழக மக்களுக்கு போதிய வசதிகள் இல்லை. வாழ்க்கையில் அவர்களுக்கு முன்னேற்றம் இல்லை. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 100 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது என்ற செய்தியை நான் கேட்க விரும்புகிறேன், என்று கூறியிருக்கிறார்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இருக்கும் என்று விஷால் கூறியிருப்பதால், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அவர் அரசியல் கட்சியை துவங்குவார் என்று தெரிகிறது. அல்லது ஏதேனும் ஒரு கட்சியில் இணையலாம். எனவே விஜய்க்கு போட்டியாக விஷால் களத்தில் குதிக்க இருக்கிறார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் விஜய்க்கு, விஷால் போட்டியா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்