- Advertisement -
Homeபொழுதுபோக்குமனைவி குஷ்புவுக்காக கணவர் சுந்தர் சி எடுத்த திடீர் முடிவு, என்னங்க கடைசியில் இப்படி...

மனைவி குஷ்புவுக்காக கணவர் சுந்தர் சி எடுத்த திடீர் முடிவு, என்னங்க கடைசியில் இப்படி ஆகிப்போச்சு – புலம்பும் ரசிகர்கள்

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி, இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். சுந்தர் சி முதன்முதலில் இயக்கிய படம் உள்ளத்தை அள்ளித்தா. இந்த படத்தில் நடிகர் கார்த்திக், ரம்பா, மணிவண்ணன், ஜெய்கணேஷ், கவுண்டமணி, ஜோதி மீனா, செந்தில், அல்வா வாசு, பாண்டு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய காமெடி வெற்றி படமாக இந்த படம் அமைந்தது.

முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சுந்தர் சி. இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய படம், முறைமாமன். ஜெயராம், கவுண்டமணி குஷ்பூ நடித்த இந்த படமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து, வெற்றி பெற்றது. இந்த படத்தை அடுத்து சுந்தர் சி இயக்கிய படம் கார்த்திக் நக்மா கவுண்டமணி ஜெமினிகணேசன் நடித்த படம் மேட்டுக்குடி. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன.

- Advertisement -

இதையடுத்து சுந்தர் சி இயக்கிய படம், அன்பே சிவம். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட இந்த படத்தில் கிரண் நாயகியாக நடித்திருந்தார். நாசர், சந்தான பாரதி, உமா ரியாஸ்கான் உள்ளிட்டோ நடித்திருந்தனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். இந்த படத்தில் கமலின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்தை நடித்த படம் அருணாச்சலம். 30 நாளில் 30 கோடியை செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படத்தை சுவாரசியமாக சுந்தர் சி தந்து இருந்தார். இந்த படத்தில் நடிகை சௌந்தர்யா, ரம்பா, மனோரமா, செந்தில், கிரேசி மோகன், ஜனகராஜ், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

- Advertisement -

தொடர்ந்து சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்த சுந்தர் சி, திடீரென நடிகராக மாறினார். சுந்தர் சி அவரது இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3, என்ற படங்களை இயக்கினார். இந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. இப்போது அரண்மனை 4 படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் நடிகை குஷ்பு, பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் அவர் இருக்கிறார். தற்போது பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது உடல்நல பாதிப்பு காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் குஷ்பு பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து அவரது கணவர் சுந்தர் சி இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மனைவிக்காக கணவர் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். இவர் சிறப்பாக பிரச்சாரம் செய்வதை பார்த்தால் குஷ்புவை மிஞ்சி விடுவாரோ ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். குஷ்பு நமக்கே போட்டியாக வந்து விடுவாரோ என்று பயந்து விடுவாரே என்றும் கலாய்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்