- Advertisement -
Homeபொழுதுபோக்குகில்லிக்கு போட்டியாக ரீ ரிலீஸ் செய்யப்படும் அஜித் படம்... சண்டையை ஆரம்பித்த ரசிகர்கள்... இதுக்கு ஒரு...

கில்லிக்கு போட்டியாக ரீ ரிலீஸ் செய்யப்படும் அஜித் படம்… சண்டையை ஆரம்பித்த ரசிகர்கள்… இதுக்கு ஒரு விடிவு காலமே பிறக்காதா…

- Advertisement -

தமிழ் சினிமாவுக்கு 2024 ஆம் ஆண்டு ஆரம்பித்தது முதல் சோதனை காலம் என்று தான் கூற வேண்டும். புதுவருடம் பிறந்து நான்கு மாதங்கள் ஆகி இருக்கும் சூழலில், இப்போது வரை மிகப் பெரிய வெற்றி என்று எந்த திரைப்படமும் அடையவில்லை. பொங்கலுக்கு மிகவும் எதிர்பார்த்து இருந்த அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

 

- Advertisement -

ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை. அருண் விஜய் நடித்த, மிஷன் சாப்டர் ஒன்று திரைப்படம் மட்டும் ரசிகர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆறுதல் அளித்தது. இதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியானது.

 

- Advertisement -

உண்மையைச் சொல்லப்போனால் அந்த திரைப்படம் வெளியானது குறித்து இங்கு பலருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு லால் சலாம் திரைப்படம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. தொய்வான திரைக்கதையே இதற்கு காரணம் என்று ரசிகர்கள் கூறினர். தொடர்ந்து, தமிழ் சினிமா சொல்லிக் கொள்ளும்படியாக இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை. இது ஒரு பக்கம் இருக்கும் சூழலில் மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் இங்கு சக்கை போடு போட்டு வருகின்றன.

 

ஏற்கனவே மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து வெளியான பிரேமலு மற்றும் ஆடு ஜீவிதம் திரைப்படங்களும் இங்கு வரவேற்பு பெற்றது. தற்போது பகத் பாஸில் நடித்திருக்கும் ஆவேசம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க புதிய திரைப்படம் எதுவுமில்லாததால், பழைய திரைப்படங்களை சினிமா விநியோகஸ்தர்கள் ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர்.

 

இதில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் மற்றும் தனுஷின் 3 ஆகிய திரைப்படங்கள் மீண்டும் வரவேற்பு பெற்றது. இப்படியான சூழலில், இருபதாம் தேதி கில்லி திரைப்படம் வெளியாகிறது. இதற்கான ப்ரீ சேல் மட்டும் 50 லட்சம் ரூபாயை கடந்துள்ளது. படத்தை மீண்டும் காண விஜய் ரசிகர்கள் ஆவலாக இருப்பதால் முதல் நாளில் மட்டும் மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இப்படியான சூழலில் தற்போது அஜித்தின் மங்காத்தாவும் ரீ ரிலிஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அவரது ஐம்பதாவது திரைப்படமாக உருவான இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்தத் திரைப்படம் அமைந்தது. இப்படியான சூழலில் வரும் மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளன்று மங்காத்தா திரைப்படம் மீண்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்