- Advertisement -
Homeபொழுதுபோக்குகில்லி படத்தை அடுத்து களமிறங்கும் மெகா சூப்பர் ஹிட் படம்; போடு வெடிய, நடிப்பு அரக்கனுக்கு...

கில்லி படத்தை அடுத்து களமிறங்கும் மெகா சூப்பர் ஹிட் படம்; போடு வெடிய, நடிப்பு அரக்கனுக்கு தேங்க்ஸ் சொல்ல தயாரான விஜய் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக, ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக இருந்து வருகிறார். இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தை தொடர்ந்து, தனது 69 வது படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு அவரது பிறந்த நாளான வருகிற ஜூன் 22ஆம் தேதி பிரசாத் ஸ்டுடியோவில் பட பூஜையுடன் துவங்குகிறது. இந்த படத்தை டைரக்டர் வினோத் டைரக்சன் செய்கிறார். இவர் ஏற்கனவே சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, வலிமை போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த முக்கிய இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் இந்த படத்தை வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடித்துவிட்டு, 2025ம் ஆண்டு முதல் அரசியலில் மட்டுமே முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே தற்போது 2004 ஆம் ஆண்டில் அவர் நடித்த கில்லி படம் வெளியானது. கடந்த இருபதாம் தேதி வெளியான இந்த படம் கடந்த ஆறு தினங்களாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் தியேட்டர்களில் வசூல் மழை பொழிந்து வருகிறது. அதாவது 2004 ஆம் ஆண்டில், 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படத்திற்கு 18 வயது 20 வயதுக்குட்பட்ட ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் மிக அதிகமாக உள்ளது.

அந்த வயதில் இருப்பவர்கள், இந்த படத்தை மிகவும் விரும்பி ரசித்து பார்க்கிறார்கள். இது அவர்களை பொறுத்த வரை விஜய் நடித்த ஒரு புது படமாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்போது படம் பார்த்தது ரசித்தவர்களும் இப்போதும் விஜய் ரசிகர்களாக வந்து, தியேட்டர்கள் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக குடும்பம் குடும்பமாக இந்த படத்துக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் இந்த படம் குடும்பத்துடன் பார்க்கிற வகையில் இருக்கிறது. ஆக்சன் படமாக இருந்தாலும் இந்த படத்தில் காதல், சென்டிமென்ட், காமெடி என குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய காட்சிகளுடன் ஜனரஞ்சகமாக இருப்பதால் இது ஒரு முன்மாதிரி படமாக இருந்து வருகிறது இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியால் சந்தோஷப்பட்ட டைரக்டர் தரணி, படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், படத்தின் விநியோகிஸ்தர் பிலிம் பேக்டரி சக்திவேல் ஆகியோர் நடிகர் விஜயை நேரில் சந்தித்து, ஆளுயர ரோஜா மாலை அணிவித்து, தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் விஜய்க்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் கில்லி படத் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் மீண்டும் இதே போல் ஒரு படத்தை ரிரிலீஸ் செய்ய முடிவு செய்து தனது தயாரிப்பில் வெளியான பழைய படங்களின் பட்டியலை தூசு தட்டிப் பார்த்த வகையில், நடிகர் விஜய் நடித்த குஷி படம் விரைவில் வெளியாகிறது. இந்த படத்தின் டைரக்டர் இன்றைய நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தான். இந்த படம் விஜய் ஜோதிகா நடிப்பில் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக இருந்தது. மிக விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சற்று முன்