- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குநர் பாலாவை மிஞ்சி விட்டாரா டைரக்டர் மாரி செல்வராஜ், அந்த படப்பிடிப்பில் இவ்வளவு கொடுமைகள் நடந்ததா?...

இயக்குநர் பாலாவை மிஞ்சி விட்டாரா டைரக்டர் மாரி செல்வராஜ், அந்த படப்பிடிப்பில் இவ்வளவு கொடுமைகள் நடந்ததா? – திக்கு முக்காடி திணறிய நடிகை

- Advertisement -

இயக்குநர் பாலா, தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு இயக்குநராக இருக்கிறார். அவரது படங்கள் என்றாலே, அது தனி அடையாளத்துடன்தான் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. சியான் விக்ரம் நடித்த சேது, டைரக்டர் பாலா இயக்கிய முதல் படம். அதைத்தொடர்ந்து இதுவரை பல படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்து விட்டார்.

நந்தா, நான் கடவுள், பிதா மகன், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நந்தா படம்தான் சூர்யாவை தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகப்படுத்தியது. பிதா மகன் படம், சியான் விக்ரமை வேறு மாதிரியாக ஒரு படமாக இருந்தது.

- Advertisement -

அதே போல் பரதேசி படத்தில், தேயிலை தோட்டத்தில் கொத்தடிமைகளை சிக்கிய அடிமை மக்களின் வாழ்க்கையை பேசிய தத்ரூபமான படமாக இருந்தது. அதே போல் தாரை தப்பட்டை படமும், கலைஞர்களின் வாழ்க்கை நிலையை அப்பட்டமாக சொல்லியது. அவன் இவன் படமும் ஆர்யா, விஷால் நடிப்பில் மிரள வைத்தது. இப்படி டைரக்டர் பாலா, தன் படைப்புகளால் பேசப்பட்டவர்.

சமீபத்தில் வணங்கான் படத்தில் நடித்த போது, சூர்யாவை பாலா அவமானப்படுத்தியதால் அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. அதே போல் பரதேசி படத்தில் அதர்வா நடித்த போது, அவரை பலமுறை குச்சியால் பாலா அடித்திருக்கிறார். சமீபத்தில் வணங்கான் படத்தில் நடித்த ஒரு மலையாள நடிகையும் பாலா தாக்கினார் என படத்தில் இருந்து விலகி விட்டது. இப்படி பாலா படத்தில் நடிப்பவர்களையே தாக்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற படம் உருவாகி வருகிறது. ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை திவ்யா துரைசாமி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், 80 கிலோ எடையுள்ள வாழைத்தார்களை தூக்கிக்கொண்டு, சேறும் சகதியுமான பகுதிகளில் ஒரு மாதத்துக்கு மேல் நடப்பது போன்ற காட்சிகளே மீண்டும் மீண்டும் படமாக்கப்பட்டது.

இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டர் என்று சொன்னதால், தினமும் 3 மணி நேரம், 4 மணி நேரம் இப்படி 80 கிலோ எடையுள்ள வாழைத்தார்களை தூக்கிக்கொண்டு சேறும் சகதியுமான பகுதிகளில் நடந்ததால் ஏண்டா, இந்த படத்தில் நடிக்க வந்தோம் என்றாகி விட்டது, என்று கூறியிருக்கிறார். டைரக்டர் பாலாவை விட, மாரி செல்வராஜ் இப்படி கொடுமை செய்திருக்கிறாரே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்