சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டால், சம்பளம் கோடிகளில் மாறிவிடுகிறது. அப்போது சினிமா கொடுத்த புகழ் போதையும், பல வெளிநாடுகளுக்கு சென்று நடிகர்களுடன் நடிக்கும் அந்த அனுபவங்களும், குறிப்பாக பெரிய ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி சேருவதும் அந்த நடிகைகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக மாறிவிடுகின்றன.
அந்த வகையில் சினிமாதான் இனி வாழ்க்கையில் நமக்கு முக்கியம் என்ற முடிவுக்கு வந்துவிடும் சில நடிகைகள், தங்களது திருமணத்தை பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கழிந்த பிறகு அவர்கள் இமேஜ் சரிந்த பிறகு, சினிமாவில் இருந்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்போது அவர்களின் முகத்தில், தோற்றத்தில் கவர்ச்சியில் மாறுபாடு ஏற்பட்டு விடுகிறது.
அதே நேரத்தில் உடல் ரீதியாகவும் அவர்கள் 40 வயது தாண்டி விட்டால் அதற்கு உண்டான இயற்கையான உபாதைகளை, பாதிப்புகளை சந்திக்க வேண்டியதும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு நடிகை 35 வயது, 40 வயது, 45 வயது என திருமணம் செய்து கொண்டால், குழந்தை பேறு என்பது சிக்கலான ஒரு விஷயமாக மாறிவிடுகிறது.
ஏனெனில் 20 முதல் 25 வயதிற்குள் திருமண வாழ்க்கை அமைந்தால், அவர்கள் வெகு விரைவில் பிள்ளைகளுக்கு தாயாக முடிகிறது. அதே நேரத்தில் 40 வயதுக்கு மேல் ஆகும் போது, உடல் ரீதியாகஅவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள், ஒரு கட்டத்தில் அவர்களுக்கு குழந்தை பிறப்பே இல்லை என்னும் அளவுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கி விடுகிறது. அதன் பிறகு டெஸ்ட் டியூப் பேபி போன்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.
இப்போது சினிமாவிலும் நீண்ட காலம் நடிக்க வேண்டும், தங்கள் குழந்தை பிறப்பிலும் எந்த பிரச்சினையும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதை யோசித்த சில நடிகைகள் இதற்கு ஒரு புதிய வழியை கண்டுபிடித்து உள்ளனர். அதாவது தங்களது கருமுட்டையை இப்போதே எடுத்து சேமித்து ஃப்ரீசரில் வைத்து சேமிப்பது, பிறகு 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கழித்து, திருமணம் செய்த பிறகு, அந்த கருமுட்டையை பயன்படுத்தி சுலபமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் ஒரு யுக்திக்கு மாறியுள்ளனர். இப்போது சில நடிகைகள் இதை ஃபாலோ பண்ணவும் ஆரம்பித்துவிட்டனர்.
குறிப்பாக சமீபத்தில் நடிகர் ராம்சரணின் மனைவி இப்படித்தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து வைத்த தனது கருமுட்டையை பயன்படுத்தி சமீபத்தில் பிள்ளை பெற்றதாக கூறப்படுகிறது. சீதாராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் இதே முறையில் தனது கருமுட்டையை சேமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டாஸ் என்ற தனுஷ் படத்தில் நடித்த மெஹரீன் பிர்சாடாவும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக, வீடியோ வெளியிட்டுள்ளார். இப்படி கோடிகளை சம்பாதிக்க திருமணத்தை தள்ளிப் போட்டுவிட்டு, குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை ப்ரீசரில் சேமித்து வைக்கும் இந்த இந்த மோசமான நாகரீகம், விரைவில் தமிழ் சினிமாத் துறையிலும் பரவி விடுமோ என்ற அச்சம் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது





