இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு இசை சக்கரவர்த்தியாக பார்க்கப்படுகிறார். இளையராஜாவை பொருத்தவரை இசையில் அவரை மிஞ்ச யாருமே இல்லை என்று கருதுகிறார். அது ஒரு விதத்தில் உண்மைதான். ஏனெனில் அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் தேனில் விழுந்த பலாச்சுளை போல் சித்திப்பானது.
இளையராஜா துவக்க காலத்தில் இருந்தே, தன் இசையால் ரசிகர்களை வசப்படுத்தி வசப்படுத்தி ஒரு கட்டத்தில் இளையராஜா பாடல்கள் கேட்டாலே நிம்மதி, மகிழ்ச்சி என்று தோன்றும் அளவுக்கு தனது இசையால் ரசிகர்களை கட்டி போட்டார். இப்போதும் இளையராஜா இசை என்றால் எல்லோருக்குமே கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது.
ஆனால் ஒரு கலைஞன் தன் படைப்புகளால் பெருமிதம் கொள்ள வேண்டுமே தவிர, கர்வம் கொள்ளக்கூடாது. ஆனால் இசைஞானி இளையராஜா இந்த விஷயத்தில் தடுமாறுகிறார். பெருமிதம் கொள்ள வேண்டிய தன் பாடல்களுக்காக, தன் இசையை நினைத்து கர்வம் கொள்கிறார். தலைகனத்துடன் நடந்து கொள்கிறார். இதனால் மற்றவர்களின் மனங்களை நோகடிக்க அவர் தயங்குதே இல்லை.
குறிப்பாக இளையராஜாவின் பல ஆயிரம் பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். ஆனால் ஒரு கட்டத்தில் அவரே தன்னுடைய இசையில் பாடிய பாடல்களை பாடக்கூடாது என்று காப்புரிமை கேட்டு பிரச்சினை செய்தவர்தான் இளையராஜா. இப்போதும் என் பாடல்கள் எனக்கே சொந்தம் என்று இளையராஜா காப்புரிமை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
இதற்கிடையே, இசையும் பாடல் வரிகளும் சேர்ந்தால்தான் பாட்டு. இது தெரியாதவன் ஞானி அல்ல என வைரமுத்து பேசியதற்கு கங்கை அமரன், கடும் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டார். மேலும், வைரமுத்து வளர்வதற்கே நாங்கள்தான் காரணம். இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இல்லை என்றும் பேசி எனது ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டார்.
இதுகுறித்து சமீபத்தில் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்ட இயக்குனர் சீனு ராமசாமி, வைரமுத்துவை வளர விடக்கூடாது, அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று இளையராஜா நினைத்தார். இதனால் தன்னுடைய நிறைய நல்ல மெட்டுக்களுக்கு டம்மி லிரிக்ஸ் போட்டு பாடல்களை வெளியிட்டார். அதே நேரத்தில் வைரமுத்து நல்ல இசை அமைப்பாளர்களுக்கு நல்ல நல்ல பாடல்களை கொடுத்து பெரிய பாடலாசிரியராக வளர்ந்து விட்டார். இது போன்ற ஒரு வளர்ச்சிக்கு உண்மையிலேயே இளையராஜா தான் காரணம் என வஞ்சப்புகழ்ச்சி செய்து பதிவிட்டுள்ளார் டைரக்டர் சீனு ராமசாமி.





