- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய், ரஜினி, கமல் என ஒருவரையும் விடாமல் சந்தித்த இயக்குனர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார்... பின்னணி என்ன...

விஜய், ரஜினி, கமல் என ஒருவரையும் விடாமல் சந்தித்த இயக்குனர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார்… பின்னணி என்ன என்று தெரியுமா?…

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ரவுண்டு வரும் அவர், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

 

டைம் டிராவலை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், பல்வேறு சுவாரசியமான காட்சிகளை வெங்கட் பிரபு வைத்திருக்கிறாராம். குறிப்பாக ஏ ஐ தொழில்நுட்பத்தை அதில் அதிகளவு அவர் பயன்படுத்தி இருக்கிறார். மறைந்த நடிகர் விஜயகாந்த், படத்தில் இரண்டு நிமிடங்கள் இருப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கிறதாம்.

 

இதுபோக த்ரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில், நடிகர் விஜய் மூத்த இயக்குனர்கள் விக்ரமன், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் சந்தித்துள்ள காட்சி வெளியாகி இருக்கிறது. விக்ரமின் மகனான விஜய் கனிஷ்காவும் விஜய்யை சந்தித்துள்ளார்.

 

நடிகர் விஜய் தற்போது இந்த அளவு முன்னேறி இருப்பதற்கு, விக்ரமன் மிக முக்கியமானவர். ஆரம்ப காலகட்டத்தில், ஹிட் படத்தை கொடுக்க போராடிக் கொண்டிருந்த விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பூவே உனக்காக திரைப்படம். இதனை விக்ரமன்தான் இயக்கியிருந்தார்.

 

காதல் மற்றும் குடும்ப உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், விஜய்யின் திரையுலக கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இப்படியான சூழலில்தான், விக்ரமன் தனது மகன் நடிக்கும் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய்யை சந்தித்திருக்கிறார். இதே போல் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சூர்யாவையும் படக்குழு சந்தித்துள்ளது.

 

கே எஸ் ரவிக்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஹிட் லிஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சரத்குமார் மற்றும் இயக்குனர் விக்ரமின் மகனான விஜய் கனிஷ்கா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி, கௌதம் மேனன், ஐஸ்வர்யா தத்தா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சற்று முன்