- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்துல அன்னிக்கு அஜீத்குமார் ஜெயிச்சார், இன்னிக்கு விஜய் சேதுபதி ஜெயிச்சிட்டார், ஆனா விஜய் பேர்...

அந்த விஷயத்துல அன்னிக்கு அஜீத்குமார் ஜெயிச்சார், இன்னிக்கு விஜய் சேதுபதி ஜெயிச்சிட்டார், ஆனா விஜய் பேர் வாங்க முடியலையே? – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானார். பிறகு நாயகனாக பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பிறகு ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் என முக்கிய ஸ்டார் நடிகர்களுடன் வில்லனாக நடித்து, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். சில படங்களில் கேமியோ ரோலிலும் நடித்தார்.

இப்படி பல விதங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி கதாநாயகனாக, வில்லனாக, காமெடியனாக, குணச்சித்திரமாக எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதில் தன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துவார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் சரியான வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

- Advertisement -

விடுதலை படத்துக்கு பிறகு, அவரது பெயர் சொல்லும்படியான படங்கள் இல்லாதது, ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது. கதாநாயகன், அல்லது வில்லன் இரண்டில் ஏதாவது ஒரு பாதையில் பயணிக்காமல் இப்படி மாறி மாறி 2 கேரக்டர்களை செய்ததுதான் ரசிகர்களிடம் ஏற்பட்ட இந்த அதிருப்திக்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

இதையடுது்து, இனி வில்லன், கேமியோ ரோல்களில் நடிக்க மாட்டேன். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார் விஜய் சேதுபதி, இதையடுத்து நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம், முதல் நாளிலேயே மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது.

- Advertisement -

விஜய் சேதுபதிக்கு இது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரக் கலைஞர்கள் நடித்துள்ளனர். குரங்குபொம்மை என்ற படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கி உள்ளார். பார்பர் கேரக்டரில் விஜய் சேதுபதி இந்த படத்தில் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார் என்று படம் பார்த்தவர்கள் விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில், தனது 50வது படமான மகாராஜா படத்தில் நடித்த, இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெற்று, வெற்றி பெற்றுவிட்டார் விஜய் சேதுபதி. அதே போல், வெங்கட்பிரபு இயக்கத்தில் 50வது படமான மங்காத்தா படத்தில் நடித்த அஜீத்குமார், மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். ஆனால், நடிகர் விஜய் நடித்த 50வது படம் சுறா, அவர் நடித்த படங்களிலேயே மிகவும் மொக்கையான ஒரு படமாக இன்று வரை இருந்து வருகிறது. விஜய்க்கு, 50வது படம் சுறா, மிகப்பெரிய தோல்வியை தந்த படமாகி விட்டது. ஆனால் விஜய் சேதுபதிக்கும், அஜீத்குமாருக்கும் 50வது படம், மிகப்பெரிய அடையாளம் தந்த படங்களாகி விட்டது என நெட்டிசன்கள், விஜயை கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்