நடிகர் ரஜினிகாந்த் கபாலி, காலா, பேட்ட என தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்துக்கொண்டிருந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் படமும், சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படமும் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களிடம் வரவேற்பும், ஆதரவையும் பெறவில்லை. அதிலும் தர்பார் பிளாப் படமாகிப் போனது. அண்ணாத்த படமும் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
இந்நிலையில் கோலமாவு கோகிலா, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாரை தனது அடுத்த படத்தை இயக்க ரஜினிகாந்த் தேர்வு செய்தார். ஆனால் அந்த நேரத்தில் நெல்சன் இயக்கிய விஜய் படம் பீஸ்ட், பெரிய அளவில் விமர்சன ரீதியாக ஏமாற்றத்தை தந்தது. ஆனால் படம் நல்ல வசூலை குவித்தது.
அந்த நம்பிக்கையில் ஜெயிலர் படத்தை இயக்க ரஜினிகாந்த் அனுமதியளித்தார். ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தங்கப்பதக்கம் படத்தின் கதையை கொஞ்சம் உல்டாவாக மாற்றி, அனிருத் பிஜிஎம் இசை தந்த பக்க பலத்தாலும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் போன்றவர்களின் கேமியோ ரோல்களாலும் ஜெயிலர் படம், பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு, காவாலா பாட்டு கவர்ச்சி குத்தாட்டம் போன்ற தமன்னாவும், வில்லன் நடிப்பில் வேற லெவலில் மாஸ் காட்டி அசத்திய மலையாள நடிகர் விநாயகனும் படத்தை பெரிய அளவில் ஹிட் படமாக மாற்றி விட்டனர். இது தங்கப்பதக்கத்தின் அப்பட்டமான ஜெராக்ஸ் காப்பி எனத் தெரிந்தும் ரசிகர்கள், படத்தை குடும்பத்துடன் ரஜினிக்காக பார்த்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து, ரஜினி நடிக்க கமிட் ஆன படம்தான் வேட்டையன். ரஜினியின் 170வது படமான இதை, லைகா புரடக்சன்ஸ் தயாரித்தது. தசெ ஞானவேல் டைரக்ட் செய்தார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எனினும் இடையில் லைகா புரடக்சன்ஸ் படத்தை சில வாரங்கள் கிடப்பில் போட்ட விஷயம் ரஜினிக்கு பின்னர்தான் தெரிய வந்தது. விடாமுயற்சி படம் போல, இதுவும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
என்னுடைய சினிமா வாழ்க்கையில், என்னுடைய படத்தை யாரும் இப்படி கிடப்பில் போட்டதே இல்லை, உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நடித்த போதுதான் இப்படி ஒரு கசப்பான அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது, என லைகா நிறுவனத்திடமே தனது கோபத்தை வெளிப்படுத்திய ரஜினிகாந்த், இப்போது வேட்டையன் படத்துக்கு டப்பிங் இப்போது பேச முடியாது என மறுப்பு தெரிவித்து விட்டார். கூலி படத்தின் பர்ஸ்ட் ஷெட்யூ் முடியட்டும். அதன்பிறகு வந்து டப்பிங் பேசுகிறேன், என்று கூறிவிட்டாராம். இன்னும் கூலி ஷூட்டிங்கே ஆரம்பிக்காத நிலையில், ரஜினி எப்போது வந்து டப்பிங் பேசுவது என லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆடிப்போயுள்ளது.





