- Advertisement -
Homeபொழுதுபோக்குஅல்லு அர்ஜுனுடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்தாரா விஜய் சேதுபதி... சம்பவம் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு...

அல்லு அர்ஜுனுடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்தாரா விஜய் சேதுபதி… சம்பவம் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய் திறந்த நடிகர்…

- Advertisement -

தற்போது பெரும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இதற்கெல்லாம் காரணம் அவரது மகாராஜா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது தான். அதுவும் 50 வது திரைப்படம் வெற்றிவாகை சூடி இருப்பதால், உற்சாக ஊற்றில் அவர் திளைத்து வருகிறார். சரியான கதை அமைப்பும், வலுவான திரைக்கதையும் இருந்தால் ஒரு திரைப்படத்தின் வெற்றி நிச்சயம் என்பதற்குச் சான்று தான் மகாராஜா திரைப்படம்.

 

- Advertisement -

குரங்கு பொம்மை என்னும் திரைப்படத்தை எடுத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்த நித்திலன் சாமிநாதன் தான் இந்த படத்தின் இயக்குனர். குரங்கு பொம்மை திரைப்படம் இங்கு சினிமா விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும், அந்தத் திரைப்படம் வெற்றி பெறவில்லை. இப்படியான சூழலில் தான் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, மகாராஜா திரைப்படத்தின் கதையை கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.

 

- Advertisement -

படத்தில் அபிராமி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், நட்டி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். நான் லீனியர் கதையில் எடுக்கப்பட்ட கதை அமைப்பு பலருக்கும் பிடித்துப் போனதால் மகாராஜாவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கிட்டத்தட்ட வெளியான நான்கு நாட்களிலேயே 40 கோடி ரூபாயை இந்த திரைப்படம் வசூலித்திருக்கிறது.

 

தற்போது வரைக்கும் விஜய் சேதுபதி திரைப்படத்தில் குறுகிய காலத்தில் அதிக ரூபாய் வசூல் ஈட்டிய திரைப்படமாக மகாராஜா பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து, மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ட்ரெயின் திரைப்படம் வெளியாகிறது.

 

அதனைத் தொடர்ந்து, ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் ஏஸ் படத்திலும் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார். தொடந்து ஹீரோவாகவே அவர் நடிப்பேன் என்று சமீபத்தில் தெரிவித்தார். இதற்குக் காரணம் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் அவர் நடித்து பல்பு வாங்கியதுதான். வில்லன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி கச்சிதமாக பொருந்தினாலும் அதை இயக்குனர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தான் இங்கு விவகாரமே.

 

குறிப்பாக ரஜினியின் பேட்ட மற்றும் ஷாருக்கானின் ஜவான் ஆகிய திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வலுவாகவே இல்லை. இந்த நிலையில் அவர் அல்லு அர்ஜுன் நடித்து பெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய நடிகர், தான் புஷ்பா படத்தின் வாய்ப்பை மறுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்