- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தில் அந்த முக்கிய கேரக்டர் நடிக்கவில்லையா? அடப் போங்கப்பா, சலித்துக்கொண்ட ரசிகர்கள் -...

இந்தியன் 2 படத்தில் அந்த முக்கிய கேரக்டர் நடிக்கவில்லையா? அடப் போங்கப்பா, சலித்துக்கொண்ட ரசிகர்கள் – டைரக்டர் ஷங்கர் இப்படி ஏமாத்திட்டாரே? ?

- Advertisement -

கடந்த 1996ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் இந்தியன். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். அப்பா சேனாபதி ( கமல்) மகனாக கமல், மகளாக கஸ்தூரி நடித்திருந்தனர். மனைவியாக சுகன்யா நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக நெடுமுடி வேணு, டாக்டராக நிழல்கள் ரவி, மகன் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, கமலின் தோழியாக ஊர்மிளா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ஆர்டிஓ அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் வேலைக்காக, புரோக்கர் வேலை பார்க்கும் கமலுக்கு நண்பராக கவுண்டமணியும், ஆர்டிஓ அதிகாரியாக நடிகர் செந்திலும் நடித்திருந்தனர். மனோரமா, அஜய் ரத்னம், பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்தியன் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்த நிலையில், அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக இருந்தன. கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளும் பலத்த வரவேற்பை பெற்றன. பிளாஷ்பேக்கில் சில காட்சிகளே வந்தாலும், கஸ்தூரி நடிப்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இந்த படத்தில், இந்தியன் தாத்தாவாக நடித்த கமலுக்கு நாயகன், மூன்றாம் பிறை படங்களுக்கு பிறகு, 3வது முறையாக சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது. ஆனால் அதே அளவுக்கு விருது பெறும் தகுதிக்கான மேக்கப்புடன், சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை சுகன்யா என்பதும் குறிப்பிடத்தக்கது. கமல் நடிப்பை போலவே, பாட்டி கேரக்டரில் சுகன்யா நடிப்பு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

அதுமட்டுமின்றி சுதந்திர போராட்ட காலகட்ட பிளாஸ்பேக்கில், பொம்மலாட்ட கலைஞராக அமிர்தவல்லி என்ற கேரக்டரில் வரும் சுகன்யா, ஆங்கிலேய அதிகாரியிடம் வந்தே மாதரம் சொல்லி கையில் பிரம்படி வாங்குவதும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் சுதந்திர போராட்ட சண்டைக்காக கமல் சென்ற நிலையில், அவருக்காக தினமும் நெற்றியில் குங்குமம் வைத்து காத்திருப்பது போன்ற காட்சிகளில் சுகன்யா, அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார்.

ஆனால், இப்போது ஷங்கர் இயக்கத்தில் வெளிவர உள்ள இந்தியன் 2 படத்தில், நடிகை சுகன்யா நடிக்கவில்லை. இந்தியன் 2 படத்தின் கதைக்கு, நடிகை சுகன்யா கேரக்டர் தேவைப்படாததால் அவர் நடிக்கவில்லை என்று ஷங்கர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்கு முன், இளமையான நாயகியாக இருந்தும், பாட்டி கேரக்டரில் இந்தியன் படத்தில் மிக அற்புதமான நடிப்பை தந்த சுகன்யாவுக்கு, ஷங்கர் இந்தியன் 2 படத்தில் வாய்ப்பளித்திருக்க வேண்டும், ஏமாற்றிவிட்டார் என்று, ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்