- Advertisement -
Homeபொழுதுபோக்குமும்பையில் குடியேறிய சூர்யாவுக்கு ஜோதிகாவால் இப்படி ஒரு நெருக்கடியா? இது அப்பா சிவக்குமாருக்கு தெரியுமா?...

மும்பையில் குடியேறிய சூர்யாவுக்கு ஜோதிகாவால் இப்படி ஒரு நெருக்கடியா? இது அப்பா சிவக்குமாருக்கு தெரியுமா? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன்தான் நடிகர் சூர்யா. சிவக்குமாரை பொருத்த வரை பல விஷயங்களில் பிடிவாதக்காரர் என்பதை அவரே பலமுறை நேர்காணல்களின் போது சொல்லி இருக்கிறார். மேடைகளில் பேசும்போதும் தெரிவித்து இருக்கிறார். அவர் ஷூட்டிங் கிளம்புகிறார் என்றால், குறிப்பிட்ட நேரத்துக்கு குளிக்க வெந்நீர் போட்டாக வேண்டும். டைனிங் டேபிளுக்கு டிபன் வந்தாக வேண்டும். இல்லை என்றால், டிபன் தட்டு பறக்கும். கோபமாக ஷூட்டிங் கிளம்பி விடுவார்.

அதே போல் ஷூட்டிங்கிலும், அவருக்கான சில விதிமுறைகளை அவரே கட்டாயம் பிடிவாதமாக பின்பற்றுவார். அது அவரது உடல்நலம், மன நலம் சம்பந்தப்பட்டது. குறிப்பாக சிகரட் பிடிக்க மாட்டார். மதுபானம் அருந்த மாட்டார். காபி டீ குடிப்பதை கூட பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டார்.

- Advertisement -

குறிப்பாக சக நடிகைகளுடன் பல ஆண்டுகாலமாக அவர் நடித்த நிலையில், எந்த ஒரு கிசுகிசு அவர் மீது வந்ததில்லை. அந்த அளவுக்கு ஒழுக்கத்திலும், கண்ணியத்திலும் சிவக்குமார், மிகச் சிறந்த பண்பாளராக, மனிதராக ஒழுக்க சீலராக வாழ்ந்து வருபவர். இப்போதும் அவரது அபார நினைவாற்றல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். அவர் ஒரு சிறந்த ஓவியர் என்பது பலருக்கும் தெரியாது.

இப்படி ஒரு கட்டுப்பாடுள்ள குடும்பத்தை நடத்தி வந்த நடிகர் சிவக்குமார், தன் மூத்த மகன் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்ததை துவக்கத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மகன் மிகவும் விரும்பியதால் வேறு வழியின்றி திருமணத்துக்கு சம்மதித்தார். ஜோதிகா திருமணத்துக்கு பிறகு நடிக்கவே கூடாது என்ற கண்டிஷன் போட்டுதான், அவர்களை திருமணத்தை நடத்தியே வைத்தார்.

- Advertisement -

ஆனால், ஜோதிகா ஒரு கட்டத்துக்கு பிறகு மாமனார் சிவக்குமாரின் கண்டிஷனை மதிக்கவில்லை. சென்னையில் இருந்தால்தானே இந்த கெடுபிடி எல்லாம் என்று, தன் கணவர் சூர்யா, பிள்ளைகளுடன் மும்பையில் குடியேறி 2 ஆண்டுகளாகிறது. இப்போது சூர்யா போலவே, ஜோதிகாவும் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கங்குவா படம் ரிலீஸ் ஆக இவ்வளவு நாள் தாமதமானதற்கு காரணமே சூர்யா தான் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மும்பையில் ஜோதிகா ஷூட்டிங் சென்றால், சூர்யாவும், சூர்யா ஷூட்டிங்குக்கு சென்றுவிட்டால் ஜோதிகாவும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது, ஜோதிகாவின் நிபந்தனையாம். மனைவி பேச்சை தட்ட முடியாமல், மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே சூர்யா ஷூட்டிங்குக்கு வந்ததால்தான், கங்குவா படத்தை முடிப்பதில் அதிக நாட்கள் இழுத்துவிட்டதாக இப்போது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்