பல நடிகர்கள் நடிக்க தவறிய திரைப்படங்களில் விஜய் நடித்து அந்த படத்தை ஹிட் ஆக்கிய சம்பவங்கள் உண்டு. அதே போல் முதலில் விஜய் நடித்து சில காரணங்களால் அந்த புராஜெக்டில் இருந்து வெளியேறிய பின் வேறு ஒரு நடிகர் நடித்து அந்த படங்களும் ஹிட் ஆகியது உண்டு. சினிமாவில் பல நடிகர்களுக்கு இவ்வாறு நடந்திருக்கிறது.

ஆனால் காமெடி நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருந்த ஒரு திரைப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். அந்த படமும் மாஸ் ஹிட் ஆகியிருக்கிறது. அது என்ன படம்? அப்படி என்ன நடந்தது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
இயக்குனர் எழில் வடிவேலுவை ஹீரோவாக மனதில் வைத்து ஒரு அருமையான கதையை எழுதிவிட்டு அதனை படமாக்குவதற்காக பல தயாரிப்பாளர்களின் அலுவலக படிகளை ஏறி இறங்கியுள்ளார். அந்த காலகட்டத்தில் வடிவேலுவை ஹீரோவாக வைத்து படமெடுக்க எந்த தயாரிப்பாளருக்கும் துணிச்சல் இல்லை. ஆதலால் அந்த படத்தை எந்த தயாரிப்பாளரும் படமாக்க முன் வரவில்லை.

அந்த சமயத்தில் நடிகர் வையாபுரியின் மூலம் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியை சென்று சந்தித்திருக்கிறார் எழில். ஆர்.பி.சௌத்ரியிடம் எழில் தான் எழுதிய கதையை கூற, சௌத்ரிக்கும் அந்த கதை பிடித்துப்போய்விட்டதாம். ஆர்.பி.சௌத்ரியிடம் அந்த சமயத்தில் விஜய்யின் கால்ஷீட் இருந்ததாம்.
ஆதலால் விஜய்யை அணுகி எழில் இந்த கதையை கூறியிருக்கிறார். முதலில் அந்த கதையில் நடிக்க விஜய் தயக்கம் காட்டினாராம். அவருக்கு இந்த கதையில் பல சந்தேகங்கள் இருந்ததாம். எனினும் அந்த சந்தேகங்களை இயக்குனர் எழில் தீர்த்து வைத்ததற்கு பிறகு அந்த கதையில் நடிக்க சம்மதித்தாராம் விஜய். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் “துள்ளாத மனமும் துள்ளும்”.

இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இத்திரைப்படம் இப்போதும் 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.





