- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா படத்தில் நடிகராக இணைந்த பிரபல இயக்குனர்... மாஸ் காட்டும் கார்த்திக் சுப்புராஜ்... பின்னி பெடலெடுக்கும்...

சூர்யா படத்தில் நடிகராக இணைந்த பிரபல இயக்குனர்… மாஸ் காட்டும் கார்த்திக் சுப்புராஜ்… பின்னி பெடலெடுக்கும் கூட்டணி…

- Advertisement -

கோலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் கார்த்திக் சுப்புராஜ். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படங்களை இயக்கி அதன் மூலம் பாராட்டை பெற்ற கார்த்தி சுப்புராஜ், அங்கிருந்து வெள்ளி திரைக்கு நகர்ந்தார். இவரின் முதல் திரைப்படமான பீட்சா, நல்ல விமர்சனத்தை பெற்றதோடு வசூலையும் குதித்தது.

 

- Advertisement -

இதன் பிறகு அவர் எடுத்த ஜிகர்தண்டா திரைப்படம் தான் கார்த்திக் சுப்புராஜ் அடுத்த தளத்திற்கு அழைத்துச் சென்றது. மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர் மத்தியில் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. ஒரு மிகப்பெரிய ரவுடியை ஒரு இயக்குனர் எப்படி கோமாளியாக்குகிறார் என்ற ஒற்றை வரி தான் படத்தின் கதை.

 

- Advertisement -

அதனைத் தன்னால் எந்த அளவு சுவாரசியமாக கொடுக்க முடியுமோ அதை சரியாக செய்து அப்லாஸ் வாங்கினார் கார்த்திக் சுப்புராஜ். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர், ரஜினியுடன் பேட்ட, தனுஷ் உடன் ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்தார்.

 

தொடர்ந்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது. சொல்லப்போனால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றியை கார்த்திக் சுப்புராஜ் பெற்றார். இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் இயக்குனர் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் எடுத்து வருகிறார்.

 

கங்குவா திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் சூர்யா அடுத்ததாக சுதா கொங்கராவுடன் இணைவதாக தான் இருந்தது. படத்திற்கு புறநானூறு என டைட்டிலும் வைக்கப்பட்டது. இதனை தனது 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் நிறுவன மூலம் சூர்யாவே தயாரிக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில், அவர் திடீரென தனது முடிவை மாற்றினார். தொடர்ந்து, அவர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்தார்.

 

இது சூர்யாவின் 44வது திரைப்படமாக உருவாகிறது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். கருணாகரன் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வருகிறது. அதில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில், படத்தில் இயக்குனர் தமிழ் இணைந்திருக்கிறார். இவர் டானாகாரன் என்னும் திரைப்படத்தை இயக்கி பெரும் வெற்றி பெற்றவர். படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்