- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைத்த முதல் படம் ரோஜா அல்ல, அட அந்த படத்துக்கு இசையமைத்தது...

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைத்த முதல் படம் ரோஜா அல்ல, அட அந்த படத்துக்கு இசையமைத்தது இவர்தானா? – ரசிகர்கள் ஆச்சரியம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏஆர் ரகுமான். இவரது துள்ளலான இசையை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. முதன் முறையாக, மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். வயதில் மிக சிறியவராக, பள்ளி மாணவர் போல இருந்த அவரது இசைக்கு, தமிழ் சினிமாவே ரசித்து தலையாட்டியது.

தொடர்ந்து மணிரத்னம், கே பாலசந்தர் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்த ஏஆர் ரகுமான், இன்றும் 30 படங்களுக்கு மேல் இசையமைக்க கமிட் செய்யப்பட்டு, மிகவும் பிஸியான ஒருவராக இருந்து வருகிறார். ஏஆர் ரகுமான் இசையில் தற்போது வெளியாகி உள்ள ராயன் படமும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆனால் ஏஆர் ரகுமான் இசையமைத்த முதல் படம் ரோஜா என்று பலரும் கருதியுள்ள நிலையில், அதற்கு முன்பே ஒரு படத்துக்கு அவர் இசையமைப்பாளராக பணிசெய்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆர்கே சேகர். மலையாள படங்களில் இசையமைப்பாளர். இவரது மகன்தான் ஏஎஸ் திலீப்குமார். 4 வயதில் பியானோ கற்றுக்கொண்ட அவர், தனது தந்தையின் ஸ்டுடியோவில் கீ போர்டு வாசித்து வந்தார்.

அவருக்கு 9 வயது ஆன போது அவரது தந்தை மறைந்துவிட்டார். பிறகு, இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அந்த குடும்பம் வாழ்ந்தது. பிரபல பள்ளியில் படித்த திலீப்குமார், பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் அந்த பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு சாதாரண பள்ளியில் அவர் படித்தார். மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயிற்சி பெற்ற அவர், இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கினார்.

- Advertisement -

பிறகு தனது தந்தையின் நண்பரும், மலையாள இசையமைப்பாளருமான எம்கே அர்ஜூன் இசைக்குழுவில் கீ போர்டு வாசிக்கத் துவங்கினார். அதன்பிறகு எம்எஸ்வி, விஜயபாஸ்கர், இளையராஜா, டி ராஜேந்தரிடம் அவர் கீ போர்டு பிளேயராக பணிபுரிந்தார்.1984ம் ஆண்டில் அவரது குடும்பம் சார்ந்த அனைவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறினர். அப்போது அவரது பெயர் அல்லா ரக்கா ரகுமான் ( ஏஆர் ரகுமான்) என மாறியது.

ஆவணப் படங்கள் மற்றும் விளம்பர படங்களுக்கு துவக்கத்தில் இசையமைத்து வந்த ஏஆர் ரகுமான், கடந்த 1991ம் ஆண்டில் இயக்குனர் அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த வணக்கம் வாத்தியாரே என்ற படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார். ஏஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமான படம் இதுதான். இந்த படத்தின் பாடல்களுக்கு சம்பத் செல்வம் என்பவர் இசையமைத்தார், அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் பின்னணி இசை, பாடல்களுக்கு இசையமைத்து சிறந்த இசையமைப்பாளர் என தேசிய விருதும், 3 மாநில விருதுகளும் பெற்றார் ஏஆர் ரகுமான்.

- Advertisement -

சற்று முன்