- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் படத்துல அந்த விஷயம் துளிகூட இல்லையே, அப்புறம் எப்படி குடும்பத்தோடு பார்க்கறது? - ராயன்...

தனுஷ் படத்துல அந்த விஷயம் துளிகூட இல்லையே, அப்புறம் எப்படி குடும்பத்தோடு பார்க்கறது? – ராயன் படம் குறித்து விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பது போல ஒரு படத்துக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. இதில் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்தால் அந்த படம் தோல்வியடைகிறது. பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக இருந்தால் அந்த படம் பெரிய வெற்றி அடைகிறது. எந்த பெரிய வெற்றிப் படமாக இருந்தாலும் அதில் குறைகளும் இருக்கவே செய்யும் என்பதை மறுக்க முடியாது.

நேற்று வெளியான படம் ராயன், இது நடிகர் தனுஷ் நடித்துள்ள 50வது படம். இந்த படத்தை நடிகர் தனுஷே இயக்கி நடித்துள்ளார். இதில் தனுஷ் தங்கையாக துஷாரா விஜயன், தம்பிகளாக சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ், வில்லன்களாக எஸ்ஜே சூர்யா, சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன நிலையில், தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். தனுஷ், இந்த படத்தை வேற லெவலில் உருவாக்கியுள்ளார், வெற்றிமாறன் படம் போல இயக்கியுள்ளார் என்றும் பலரும் பாராட்டினர்.

ஆனால் இந்த படம் குறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து வீடியோ ஒன்றில் பேசியிருப்பதாவது, ராயன் படத்தை தனுஷே எழுதி, இயக்கி நடித்திருக்கிறார். இடைவேளை வரை கிராமத்தில் இருந்துவிட்டு பிறகு நகரத்துக்கு வருகிறார். வடசென்னை என்றாலே வெட்டு குத்து வன்முறைதான் என இந்த படத்திலும் காட்டியிருக்கிறார். அதனால் ராயன் படம் வடசென்னை 2ம் பாகம் போல தோன்றுகிறது.

- Advertisement -

படத்தில் கொலை, துரோகம், பழிவாங்குவதுதான் முக்கியமாக வருகிறது. சரவணன் கொலையான பிறகுதான், படத்தில் விறுவிறுப்பே வருகிறது. அதுவரை படம் ரொம்பவும் ஸ்லோவாக தான் போகிறது. இந்த படத்தின் உண்மையான ஹீரோ இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான்தான். அவரது பின்னணி இசை படத்துக்கு பக்கபலமாக உள்ளது. சண்டை காட்சிகளும் மனதில் நிற்கின்றன. இசையும், சண்டை காட்சிகளும்தான் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.

சண்டை காட்சி பிடிக்கும், ஏஆர் ரகுமான் இசை பிடிக்கும் என்பவர்கள் இந்த படத்துக்கு போகலாம். ஆனால் படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான கதை இல்லை. வடசென்னை 2ம் பாகம்தான் ராயன் என்று சொல்லலாம். தங்கை சென்டிமென்ட் ரொம்ப ஓவராக உள்ளது. குடும்பத்தோடு படம் பார்க்க, படத்தில் காமெடி இருக்க வேண்டும். இந்த படத்தில் ஒரு சின்ன காமெடி காட்சி கூட இல்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை படம் சீரியஸாகவே செல்கிறது, என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

- Advertisement -

சற்று முன்