தமிழ் சினிமாவில் ரஜினியில் தொடங்கி கமல்ஹாசன் அஜித் விஜய் என ஏராளமான நட்சத்திரங்களும் தனக்கே உண்டான ரசிகர்களுடன் வெற்றிகரமாக திரைத் துறையில் பயணித்து வருகின்றனர். இவர்களுக்கு எப்போதுமே ஐம்பதாவது படம் என்பது தனி சிறப்பு தான்.
ஆனால் அதில் எத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் இங்கு மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில் விஜய் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அவரது 25வது திரைப்படமான கண்ணுக்குள் நிலவு இங்கு பலருக்கும் பிடிக்காமல் போனது. வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று விஜய் நடித்திருந்தாலும் அது இங்கு பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அதேபோல் அவரது ஐம்பதாவது திரைப்படமான சுறா படுதோல்வியை சந்தித்தது. அந்தக் காலங்களில் விஜயின் மார்க்கெட் சற்று வலுவிழுந்து காணப்பட்டது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கு 25 மற்றும் 50 வது திரைப்படங்கள் சிறப்பாகவே அமைந்தன. அஜித்தின் 25வது திரைப்படமான அமர்க்களம் வெள்ளிவிழா கொண்டாடியது.
இதே போல் 50வது திரைப்படமான மங்காத்தாவும் அதிரிபுதிரி வெற்றியை பெற்றது. இவர்களின் வரிசையில் தற்போது இடம் பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது ஐம்பதாவது திரைப்படமாக உருவான மகாராஜா பட்டி தொட்டி எங்கும் ஏற்ற வைத்தது. இதற்கு மிக முக்கிய காரணம் படத்தில் சொல்லப்பட்ட நான் லீனியர் விஷயம்தான்.
வெவ்வேறு காலத்தில் நடந்த கதையை ஒரே நேர்க்கோட்டில் கொண்டுவரும் மாயாஜாலத்தை மிக அற்புதமாக செய்து காட்டி நம்மை மிரள வைத்திருப்பார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் இருக்கை நுணுக்கி வந்து யோசிக்க வைத்ததால், மகாராஜா மகத்தான வெற்றியை பெற்றது.
தற்போது ஓடிடி தளத்திலும் இந்த திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இந்தி திரை உலகில் விஜய் சேதுபதி ஏற்கனவே பரீட்சையமானவர் என்பதால் அங்கேயும் இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படியான சூழலில் பாலிவுட்டில் மகாராஜா திரைப்படம் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்தான் இதனை வாங்கி இருக்கிறதாம். இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில், அமீர்கான் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





