- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை பங்கேற்ற தொகுப்பாளர்கள், இப்படி ஒரு ஒற்றுமையை இதுவரைக்கும் யாராவது கவனிச்சீங்களா? -...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை பங்கேற்ற தொகுப்பாளர்கள், இப்படி ஒரு ஒற்றுமையை இதுவரைக்கும் யாராவது கவனிச்சீங்களா? – இது வம்பான சமாச்சாரமா இருக்குதே…?

- Advertisement -

விஜய் டிவியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ரியாலிடி ஷோக்கள் நிறைய இருக்கின்றன. அதில் கடந்த 7 ஆண்டுகளாக பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் ரியாலிடி ஷோ. கடந்த 2017 முதல் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஆரம்பம் முதல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இடையில் ஒருமுறை நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட போது அவரது நெருங்கிய தோழி, நடிகை ரம்யா கிருஷ்ணன் இரண்டு வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தற்காலிக தொகுப்பாளராக வந்தார்.

- Advertisement -

அதன்பிறகு நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்து இணைந்துக்கொண்டார். மேலும் 24 மணி நேரம் ஒளிபரப்பான அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார். அப்படி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்காமல் தவிர்க்க காரணம், அப்போது கமல் விக்ரம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார்.

ஆனால் இப்போது தக்லைப், கல்கி 2, இந்தியன் 3, அன்பறிவ் இயக்கும் புதிய படம் மற்றும் அமெரிக்காவில் 90 நாட்கள் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி போன்ற காரணங்களால், பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 8ல் தன்னால் பங்கேற்க இயலாது என கமல் அறிக்கை வெளியிட்டு, விலகி விட்டார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளாராக விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், தனக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிபாரிசு செய்தது நடிகர் சிலம்பரசனை தான். ஆனால் சிலம்பரசனை காட்டிலும் விஜய் சேதுபதி பேச்சாற்றலில் வலிமை மிக்கவர், நிறைய அனுபவங்களை கண்டவர் என்பதால் எந்த விஷயத்தையும் அவர் வேற லெவலில் யோசித்து பேச முடியும் என்பதால், அவரை விஜய் டிவி முடிவு செய்திருக்கிறது.

இப்போது புதிய தகவலாக, நடிகர் கமல்ஹாசன் ஒரு முத்தக் கலைஞர். பல படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்தவர். அதே போல் சிம்பு, நயன்தாரா முத்தக்காட்சி புகைப்படங்கள், ஒரு காலகட்டத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது விஜய் சேதுபதி, தன் ரசிகர்களை கட்டியணைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்துபவர். இப்படி முத்தக் கலைஞர்களாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்