- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி ஷூட்டிங் எப்போ முடியுது தெரியுமா? வெளியானது உறுதியான தகவல் - ஆனாலும் 24ம் தேதி...

விடாமுயற்சி ஷூட்டிங் எப்போ முடியுது தெரியுமா? வெளியானது உறுதியான தகவல் – ஆனாலும் 24ம் தேதி வரை அஜீத்குமார் பிஸிதான் – அந்த பாடல் காட்சி சீக்ரெட் என்னன்னு தெரியலையே…?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அதே போல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஐதராபாத்தில் நடப்பதால் பகலில் விடாமுயற்சி, இரவில் குட்பேட் அக்லி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

வழக்கமான அஜீத்குமார் பாணி என்னவென்றால், ஒரு படத்தில் கமிட் ஆகி நடிப்பார். அந்த படம் முடிந்து வெளியான பின்புதான் அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பார். ஒரே சமயத்தில் 2 அல்லது 3 படங்களில் நடிப்பது எல்லாம் அவரது ஸ்டைல் கிடையாது.

ஆனால் இந்த முறை வேறு வழியின்றி விடாமுயற்சி படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்கிறார். அதே நாளில் குட்பேட் அக்லி படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்கிறார். இப்படி அவர் ஒரே நாளில் இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டு நடித்து வருவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு, 10 மாதங்களாக நடந்து வருகிறது. ஆனால் இடையில் 4 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு இரண்டு முக்கிய காரணம், அஜர்பைஜானில் நீடித்த இயற்கை சீற்றங்களும், படத்தை தொடர்ந்து தயாரிக்க முடியாமல் நெருக்கடியில் சிக்கிய லைகா நிறுவனமும்தான்.

எனினும் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பை ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் இன்னும் சில பேட்ச் ஒர்க் காட்சிகள், அஜர்பைஜானில் எடுக்கப்பட வேண்டும் என்று படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி கூறிக்கொண்டு இருக்கிறார். அத்துடன், நடிகர் அஜீத்குமார், திரிஷா பாடல் காட்சி ஒன்றும் மீதம் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி வருகிற 16ம் தேதியுடன் ஐதராபாத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடைகிறது. அதன்பிறகு 24ம் தேதி வரை குட்பேட் அக்லி படப்பிடிப்பில் பகலில் மட்டுமே அஜீத்குமார் கலந்துக்கொண்டு 25ம் தேதி அஜீத்குமார் சென்னை திரும்புகிறார். அஜீத்குமார், திரிஷா பாடல்காட்சியை விடாமுயற்சி படக்குழு எடுக்கலாம், அல்லது எடுக்காமலும் விட்டு விடலாம் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. வரும் நாட்களில் அதன் உண்மை நிலவரம் தெரிய வரும்.

சற்று முன்