நடிகர் விக்ரம் நடித்து, இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் தங்கலான். இந்த படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த வியாழன் அன்று, சுதந்திர தினத்தில் வெளியானது. ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே 26.44 கோடி ரூபாய் வசூலித்தது.
கர்நாடகா மாநிலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் தங்க வயலில் வேலை செய்த கொத்தடிமை தொழிலாளர்களை பற்றிய படம் என்பதால், ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது.
அதே போல் டிமாண்டி காலனி 2 படமும், சுதந்திர தினத்தன்று வெளியானது. 9 ஆண்டுகளுக்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரில், திகில் படமான டெரர் மூவியாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதனால் அஜய் ஞானமுத்து, மீண்டும் டிமாண்டி காலனி 2 படத்தை, அருள்நிதி நடிப்பில் மீண்டும் தந்திருக்கிறார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, படத்துக்கு ரசிகர்கள் மத்தியில், பாசிட்டிவ் ஆன விமர்சனம் கிடைத்துள்ளது. அதனால் டிமாண்டி காலனி 3, டிமாண்டி காலனி 4 படங்களும் உருவாக வாய்ப்புள்ளதாக, நடிகர் அருள்நிதி ஏற்கனவே கூறியிருக்கிறார்.
இந்நிலையில், தங்கலான் படம் 3 நாட்களில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்துள்ளது. வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்களில் இவ்வளவு கோடிகளை தங்கலான் அள்ளியுள்ளதால், வரும் நாட்களில் இன்னும் தங்கலான் படம் வசூல் பல கோடிகளாக அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
மேலும், நடிகர் அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 2 படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 3 நாட்களில் ரூ. 15.5 கோடி வரை வசூலித்துள்ளது. தங்கலான் படம் ரூ. 40 கோடி கடந்தும், டிமாண்டி காலனி 2 ரூ. 15.5 கோடி கடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படங்களுக்கு வரும் நாட்களில் இன்னும் வசூல் பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





