- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் திரைப்பட ரிலீஸிற்க்கு நாள் குறித்த படக்குழு... ரஜினியுடன் மோத போகும் சூர்யா... என்ன ஆகப்போகுதோ...

வேட்டையன் திரைப்பட ரிலீஸிற்க்கு நாள் குறித்த படக்குழு… ரஜினியுடன் மோத போகும் சூர்யா… என்ன ஆகப்போகுதோ தெரியலையே…

- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத்தின் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் ஒரு படத்தை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்கினார். லால் சலாம் எனும் பெயரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

 

- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் மதச்சாயம் பூசப்படுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், படு தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ரஜினி வரும் காட்சிகள் அவ்வளவு அழுத்தமாக இல்லை என்று ரசிகர்கள் கூறினர். இதனால் அந்த படம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

 

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க லைக்கா நிறுவனத்தின் கீழ் ரஜினி நடித்திருக்கும் மற்றொரு திரைப்படமான வேட்டையன் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஜெய் பீம் என்னும் திரைப்படத்தைக் கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பியும் ஞானவேல் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

 

இதில் நடித்திருக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் தான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் ரானா, மலையாள நடிகர் பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இருந்து டீசர் அண்மையில் வெளியானது.

 

அதில் ரஜினிகாந்த் பேசும் குறி வச்சா இரை விழனும் என்ற பஞ்ச் டயலாக் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த திரைப்படம் குறித்து பேசி இருந்த மஞ்சு வாரியர், தான் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாக தெரிவித்து இருந்தார். இதே போல் பகத் பாசிலுக்கும் நகைச்சுவையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் போஸ்டரில் ரஜினிகாந்த் ஐபிஎஸ் அதிகாரி கெட்டப்பில் இருக்கிறார். இதன் மூலம் அவர் போலீசாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. கல்வித்துறையில் உள்ள சுரண்டல்களை மையப்படுத்தி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதி, சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாகிறது. ரஜினி மற்றும் சூர்யா ஆகிய இருவரின் திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டி உள்ளது.

 

- Advertisement -

சற்று முன்