- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தை சத்தம் இல்லாமல் திரையரங்கில் பார்த்த விஜய்... அவருடன் இருந்தது யார் யாரெல்லாம்...

தி கோட் படத்தை சத்தம் இல்லாமல் திரையரங்கில் பார்த்த விஜய்… அவருடன் இருந்தது யார் யாரெல்லாம் என்று தெரியுமா…

- Advertisement -

லியோ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தி கோட். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அதன் பணிகள் விறுவிறுப்பாக முடிந்து தற்போது படம் வெளியாகி இருக்கிறது. வெங்கட் பிரபு இதனை இயக்கியிருக்கிறார்.

 

- Advertisement -

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

 

- Advertisement -

விஜயின் கட் அவுட் களுக்கு பாலாபிஷேகம் செய்தும், வெடி வெடித்தும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். முழுக்க முழுக்க கமர்சியல் மெட்டீரியலாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக முதல் பாதி நன்றாக உள்ளதென ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 

அதிலும் இரண்டாம் பாதியில் கடைசி 40 நிமிடங்கள் விறுவிறுப்பாக இருப்பதாகவும், இளைய வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் கலக்கி இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரசிகர்களுக்கு தெம்பூட்டும் வகையில் மட்ட பாடல் இருப்பதாகவும், அதில் திரிஷா நடனமாடி இருப்பதாகவும் ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

 

கிட்டத்தட்ட ஓரளவு நல்ல விமர்சனத்தையே கோட் திரைப்படம் பெற்றிருப்பதால், அடுத்த வாரங்களில் இந்த திரைப்படத்தின் வசூல் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமானோர் முன்பதிவு செய்திருப்பதால் முதல் நாளில் வசூலே 100 கோடி ரூபாயை தாண்டும் என்று கூறுகிறார்கள்.

 

இப்படியான சூழலில் நடிகர் விஜய், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே அடையாறில் உள்ள பிரிவியூ தியேட்டரில் கோட் திரைப்படத்தை பார்த்திருக்கிறார். அவருடன் அவரது மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினர் பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் வைபவ், நடிகை மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோரும் விஜயுடன் படத்தைக் கண்டு களித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்