- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் செய்த தரமான சம்பவம், அமிதாப் பச்சன் இனி தமிழில்...

வேட்டையன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் செய்த தரமான சம்பவம், அமிதாப் பச்சன் இனி தமிழில் நிறைய படங்களில் தாராளமாக நடிக்கலாமே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் வேட்டையன். லைகா புரொடக்சன் தயாரித்துள்ள இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவரும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று இரவு சென்னை, இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் தசெ ஞானவேல், சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன்லால், மேலும் படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியார், ராணா டகுபதி, துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பங்கேற்க வாய்ப்புள்ளது. இன்றைய விழாவில் ரஜினி குட்டிக்கதை பேசுவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வேட்டையன் படத்தில் கேமியோ ரோலில் முக்கிய கேரக்டரில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாபச்சன் நடித்துள்ளார். அவரது அறிமுக வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. அமிதாப்பச்சனின் கம்பீரமான தோற்றமும், நடிப்பும் அந்த வீடியோவில் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சனுக்கு தமிழ் பேசத் தெரியாது என்ற நிலையில், வேட்டையன் படத்தில் நடித்துள்ள அவருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பின்னணி குரல் கொடுத்துள்ளார். ஆனால் பிரகாஷ்ராஜ் குரல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் என்பதால், அமிதாபச்சன் உருவத்திற்கும் அவர் வழக்கமாக பேசுகிற கனமான குரலுக்கும், கணீர் குரலுக்கும் பிரகாஷ்ராஜ் குரல் செட் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

தற்போது அதற்கான முக்கிய ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்துள்ளனர். அதாவது நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் அமிதாப் பச்சனுக்கு தமிழில் பின்னணி குரலில் பேசி இருந்தாலும், அவரது குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் அமிதாபச்சன் உருவத்திற்கும், குரலுக்கும் பொருந்துகிற மாதிரியான கனமான குரலில் ஒலிப்பது போல் தொழில்நுட்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால் அமிதாபச்சன் குரலில் பிரகாஷ்ராஜ் குரல் சரியாக பொருந்தும்படி ஏஐ தொழில்நுட்பத்தில் பின்னணி குரல் ஒலிக்க செய்துள்ளதால், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் குரலில் அமிதாபச்சனின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று கூறப்படுகிறது. இனி தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பத்தில் இது போல் மற்ற நடிகர்களும், மற்ற மொழி நடிகர்களுக்கு பேச முடியும் என்ற விஷயத்தை வேட்டையன் படம் துவக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்