- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தை தயாரிக்க நான் கால்ஷீட் கேட்டேனா? ஆவேசப்பட்ட நடிகை சிம்ரன் - என்னுடைய உணர்ச்சிகள்...

விஜய் படத்தை தயாரிக்க நான் கால்ஷீட் கேட்டேனா? ஆவேசப்பட்ட நடிகை சிம்ரன் – என்னுடைய உணர்ச்சிகள் பற்றி யாருக்கும் கவலை இல்லையா என்று கேள்வி

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அஜீத் குமாருடன் அவர் நடித்த வாலி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே போன்ற படங்களில் நடிகர் விஜயுடன் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஆல்தோட்ட பூபதி நானடா என்ற ஐட்டம் பாடலுக்கு யூத் படத்தில் விஜயுடன் சிறப்பாக நடனமாடி இருந்தார். சிம்ரன் திருமணமாகி செட்டில் ஆன பிறகு படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார்.

எனினும் சமீபமாக சில படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்திலும், சமீபத்தில் வெளியான பிரசாந்த் நடித்த அந்தகன் படத்திலும் சிம்ரன் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை சிம்ரன் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதிலும் அந்தகன் படத்தில் சிம்ரன் நடிப்பு வேற லெவலில் இருந்து பாராட்டைப் பெற்றது.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் விஜயை சிம்ரன் நேரில் சந்தித்து பேசியதாகவும், அப்போது விஜயை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்புவதாகவும், என்னுடைய தயாரிப்பில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று விஜயிடம் சிம்ரன் கேட்டதாகவும் கூறப்பட்டது. அதற்கு நடிகர் விஜய், என்னுடைய படங்கள் ரிலீசாகும் நேரத்தில் பல விதங்களில் பிரச்சனை வரும். ஒரு தயாரிப்பாளராக உங்களால் அந்த பிரச்னைகளை எல்லாம் சமாளிக்க முடியாது. அதனால் வேண்டாம் என்று விஜய் சிம்ரனுக்கு பக்குவமாக சொல்லி அனுப்பியதாகவும் தகவல் பரவியது.

மேலும் படம் தயாரிப்பது எல்லாம் மிகவும் கஷ்டம். அதிக செலவும், பிரச்னைகளும் உருவாகும். அதனால் ஜாலியாக இருங்கள் என்று நடிகர் விஜய் சிம்ரனுக்கு அட்வைஸ் செய்ததாகவும் தகவல்பரவியது. இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பதாவது, எந்த பெரிய ஹீரோவுடனும் சேர்ந்து பணியாற்ற நான் காத்துக் கிடக்கவில்லை. இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால் இது போன்ற வதந்திகளை இனிமேல் பொறுத்துக் கொள்ள மாட்டேன். என்னுடைய குறிக்கோள் வேறு. ஒரு பெண்ணாக என்னுடைய எல்லைகள் என்ன என்பது எனக்கு தெரியும். என்னுடைய பெயரை மற்றவர்களுடன் இணைத்து வதந்தி தனது பல ஆண்டுகளாக பார்க்கிறேன்.

ஸ்டாப் என சொல்வது பெரிய வார்த்தை தான். ஆனால் அதுதான் தற்போது சரியாக இருக்கும். இந்த செய்தி உண்மையா என்று கூட யாரும் எனக்கு போன் செய்து கேட்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகள் பற்றி யாருக்கும் கவலை இல்லை. பொய்யான செய்தி பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிம்ரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்