- Advertisement -
Homeபொழுதுபோக்குஉருட்டு கேள்விப்பட்டு இருப்பீங்க, ஆனா இப்படி ஒரு உலக மகா உருட்டை கேள்விப்பட்டு இருக்கீங்களா? வேட்டையன்...

உருட்டு கேள்விப்பட்டு இருப்பீங்க, ஆனா இப்படி ஒரு உலக மகா உருட்டை கேள்விப்பட்டு இருக்கீங்களா? வேட்டையன் படத்துல கமிட் ஆனபோது நடிகை மஞ்சு வாரியாருக்கு அந்த விஷயமே தெரியாதாம்…

- Advertisement -

லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் வேட்டையன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட்டாக இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியார், அபிராமி, ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார்.

வருகிற அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ஹண்டர் வாண்டர் பாடல் வெளியானது. முதல் சிங்கிளாக அதற்கு முன் மனசிலாயோ பாடல் வெளியானது. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே தர்பார் படத்தில் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்திருந்தார். கபாலி, காலா, கூலி என தாதா கேரக்டர்களை தேர்வு செய்யும் ரஜினிகாந்த் தர்பார், ஜெயிலர், வேட்டையன் என போலீஸ் கேரக்டர்களை தேர்வு செய்கிறார். தனது படங்களில் போலீஸ் அல்லது தாதா என்ற இரண்டு மாஸ் காட்டும் கேரக்டர்களில் மட்டுமே தொடர்ந்து ரஜினி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் படத்தில் நடிகை மஞ்சு வாரியார், தாரா என்ற கேரக்டரில் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார். மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மஞ்சு வாரியார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், எச் வினோத் இயக்கத்தில் துணிவு ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். விடுதலை 2 படத்திலும் நடித்து வரும் இவர், இப்போது வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடலில் மஞ்சுவாரியாரின் நடனம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. வேட்டையன் படம் குறித்து மஞ்சுவாரியார் ஒரு நேர்காணலில் கூறியதாவது. துணிவு, அசுரன், விடுதலை 2 போன்ற படங்களை தேர்வு செய்து நடிக்க முக்கிய காரணம் அந்த படத்தின் இயக்குனர்கள்தான். இவர்களைப் போன்ற சிறந்த இயக்குனர்கள் படத்தில் நடிக்க நான் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

துணிவு படத்தின் நடிக்க சம்மதித்த பிறகுதான், அந்த படத்தில் அஜித்குமார் நடிக்கிறார் என்று எனக்குத் தெரியும். அது தெரிந்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதேபோன்ற ஒரு சூழல்தான் வேட்டையன் படத்திலும் நடந்தது. ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று கமிட் ஆன பிறகுதான் எனக்கு தெரிந்தது. நான் ஆசைப்பட்ட இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களுடன் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஒரு படத்தில் நடிக்கும் போது அதில் ஹீரோ யார் என்றே தெரியாமல் கமிட் ஆனதாக மஞ்சு வாரியார் கூறியிருப்பது, இது உலக மகா உருட்டா இருக்குதே என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்