நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 23 வது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்றது. ஆனால் கடந்த சில நாட்களாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சல்மான் கான் உடனான சிக்கந்தர் திரைப்படத்தில் முருகதாஸ் கவனம் செலுத்தி வருவதால், சிவகார்த்திகேயன் உடனான படப்பிடிப்பு பணிகள் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது.
தீபாவளி தினத்தை முன்னிட்டு, அடுத்த மாதம் 31 ஆம் தேதி இந்த படத்தை வெளியிடுகிறார்கள். ராணுவ பின்புலத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான, ராஜ்குமார் பெரியசாமி தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஆக, தனது உடல் எடையை சிவகார்த்திகேயன் ஏற்றி இருக்கிறார். கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்ட அவர், கட்டு மஸ்தான உடலோடு காட்சி அளித்தார்.
சொல்லப்போனால், தனது நகைச்சுவை பாணியை முற்றிலுமாக உடைத்து முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை தான் இந்த திரைப்படம் பிரதிபலிப்பாக தகவல் வெளியானது. தற்போது அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அவர் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளமை துள்ளலோடு, சிவகார்த்திகேயனுடன் அவர் காதல் செய்யும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திலிருந்து முதல் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.





