- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழை விட தெலுங்கில் அதிக சேதாரத்தை சந்தித்த கார்த்தி நடித்த மெய்யழகன் படம், இப்படி ஒரு...

தமிழை விட தெலுங்கில் அதிக சேதாரத்தை சந்தித்த கார்த்தி நடித்த மெய்யழகன் படம், இப்படி ஒரு விமர்சனம் வந்தா அப்புறம் என்னதான் பண்றது? – புலம்பும் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் உணர்வுபூர்வமான படங்கள் வெளிவருவது என்பதே மிகவும் அரிதாகி விட்டது. அதுவும் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்ற கமர்ஷியல் ஹீரோக்களின் ஆதிக்க மையமாக தமிழ் சினிமா மாறிவிட்டதால், ஹீரோயிசம் காட்டும் படங்களை இயக்குவதிலேயே இயக்குனர் அதிக ஆர்வமும் காட்டுகின்றனர். அதன் மூலம் பல நூறு கோடிகளை அள்ளியும் வருகின்றனர்.

ரஜினிகாந்த் 73 வயதிலும் கூட கதையம்சம் உள்ள படங்கள் என்றால், தெறித்து ஓடும் நிலைக்கு வந்து விடுகிறார். கமர்ஷியல் படம் என்றால்தான் நான் நடிப்பேன் என்கிறார். போலீஸ் அதிகாரியாக மாஸ் காட்டுவேன், இல்லை என்றால் பெரிய தாதா போல நடிப்பில் கெத்து காட்டுவேன் என இந்த 2 கேரக்டர்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார்.

- Advertisement -

தாதாவாக காலா, கபாலி, பேட்ட, கூலி படங்களிலும், போலீஸ் அதிகாரியாக தர்பார், ஜெயிலர், வேட்டையன், ஜெயிலர் 2 படங்களிலும் நடிக்கிறார். இப்படி முன்னணி ஹீரோக்கள் எல்லாம் கமர்ஷியல் என்ற பெயரில் ரசிகர்களை குதூகலிக்க வைத்து கோடிக்கணக்கில் வசூல் செய்யும் அவர்களது படங்களில் உற்சாகம் இருக்குமே தவிர உணர்வுபூர்வமான காட்சிகள் இருக்காது.

காக்கா முட்டை, சித்தா, குட்நைட், பண்ணையாரும் பத்மினியும், பார்க்கிங், மகாராஜா, வாழை, லப்பர் பந்து, போன்ற சில படங்களில் மட்டுமே மனதை பிசைந்து ரசிகர்களை ஏதோ செய்யும் சில உணர்வுகள் தூண்டும். அப்படிப்பட்ட நல்ல படங்கள் எப்போதாவது வரும், அல்லது வராமலேயே போய்விடவும் அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதுவும் ரஜினி, விஜய், அஜீத்குமார் போன்றவர்கள் ரசிகர்களின் பாக்கெட்டுகளை குறிவைத்து கமர்ஷியல் என்ற பெயரில் குப்பை படங்களை தரும் வரை, அதற்கு நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி போன்றவர்கள் பக்கபலமாக இருக்கும் வரை தமிழ் சினிமா வளராமல் நாளுக்கு நாள் இப்படி தேய்ந்துக்கொண்டே தான் போகும். சின்ன பட்ஜெட் படங்களே இல்லாமல் போய்விடும்.

ஆனால் நேற்று கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. உறவுகளின் உணர்வுகளை சொல்லும் படமாக உள்ளது. இந்த படத்தின் நீளம் அதிகம் என்று பலரும் விமர்சித்ததால், இப்போது தமிழில் மெய்யழகன் படத்தில் 7 நிமிடங்கள் 35 வினாடிகளும், தெலுங்கில் 20 நிமிடங்களும் ‘கட்’ செய்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. அப்படி என்றால், தமிழை விட தெலுங்கில்தான் அதிக சேதாரம் என்று சொல்லுங்க, என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்