தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் உயர்ந்த சிகரத்தில் இருப்பவர் மணிரத்னம். அதேபோல் நடிப்பில் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கலைஞராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இந்திய அளவில் பேசப்படும் மணிரத்னத்தின் படங்கள் எப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. அதேபோல் நடிகர் கமலfஹாசனின் நடிக்கும் படங்களும் இந்திய அளவில் பேசப்படும் படங்களாக இருக்கின்றன.
கடந்த 1980 களின் இறுதியில் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் நாயகன். வேலு நாயக்கர் என்ற கேரக்டரில் மும்பையைச் சேர்ந்த வரதராஜ முதலியார் வாழ்க்கை பின்னணியை கொண்ட இந்த கதையை மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வேலு நாயக்கராக நடிகர் கமல்ஹாசன் வாழ்ந்திருந்தார்.
இந்த படத்தில் கமல்ஹாசன் மனைவியாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார். இதுதான் அவருக்கு முதல் படம். அதேபோல் நிழல்கள் ரவி, ஜனகராஜ், டெல்லி கணேஷ், சத்யன், நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பு படத்தில் பேசப்பட்டது. வேலு நாயக்கர் கேரக்டரில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கமலுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது.
நாயகன் படத்துக்கு பிறகு, ஏறக்குறைய 35 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன், மணிரத்னம் மீண்டும் தக்லைப் படம் மூலம் தற்போது மீண்டும் இணைந்தனர். தமிழ் சினிமாவில் சிகரங்களான இருவரும் மீண்டும் கைகோர்த்து தக் லைப் படம் உருவானது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாகவும், நடிகர் சிலம்பரசன் முக்கிய கேரக்டர்களும் நடித்திருக்கிறார், மேலும் திரிஷா, அபிராமி உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் தக் லைப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் ரப் காப்பியை நடிகர் கமல் பார்த்திருக்கிறார். ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற அமெரிக்காவுக்கு சில தினங்களுக்கு முன் கமல் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. மருதநாயகம் படத்தை ஏஐ தொழில்நுட்பத்தில் எடுக்க திட்டமிட்டே கமல் இந்த பயிற்சி பெற அமெரிக்கா சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு முன்பாக மணிரத்னத்திடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், தக்லைப் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. இந்த அளவுக்கு படம் மாஸாக இருக்கும் என்று நினைக்கவில்லை. படம் பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்பை பெறும். நாம் மீண்டும் ஒரு படத்தில் இணைவோம். மறுபடியும் பணி செய்வோம் என்று கூறியிருக்கிறார். அதற்கு மணிரத்னமும் ஓகே சொல்லி இருக்கிறார். அதனால் இந்த படம் தக்லைப் படம் 2ம் பாகமாக உருவாகும் என்று ஒரு பேச்சு பரவி வருகிறது.





