- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சமந்தா குறித்து அவதூறாக பேசிய அமைச்சர், கண்டித்த நாகர்ஜூனா, நானி உள்ளிட்ட பிரபலங்கள் -...

நடிகை சமந்தா குறித்து அவதூறாக பேசிய அமைச்சர், கண்டித்த நாகர்ஜூனா, நானி உள்ளிட்ட பிரபலங்கள் – மன்னிப்பு கேட்டு பின்வாங்கிய அமைச்சர் என்ன சொல்லி இருக்காங்க?

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் மற்றும் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. 2021ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்று விட்டனர்.

இப்போது நடிகை சமந்தா தனியாக படங்களின் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் நாக சைதன்யாவும் பல படங்களின் நடித்து வருகிறார். இவர் மிக விரைவில் சோபிதா துலிபாலா என்ற நடிகையை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா விவாகரத்து குறித்து தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. சமந்தா நாக சைதன்யா விவாகரத்துக்கு தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே டி இராமாராவ் தான் காரணம் என கொண்டா சுரேகா குற்றச்சாட்டு கூறினார். இது பெரிய சர்ச்சையாக மாறி கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

ஒரு பெண்ணாக பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சுரேகா, இதுபோன்ற பொய்யான கருத்துக்களை கூறக்கூடாது என நடிகர் நாகார்ஜுனா கண்டனம் தெரிவித்திருந்தார். நடிகைகளின் சொந்த வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புவது வெட்கக்கேடான செயல் எனவும் கடுமையாக சாடி இருந்தார் நாக சைதன்யா.

- Advertisement -

அதேபோல் இந்த விவகாரம் குறித்து நடிகர் நானியும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். எப்பேர்ப்பட்ட முட்டாள்தனத்தையும் பேசிவிட்டு தப்பிக்க நினைக்கும் அரசியல்வாதிகளை பார்க்கவே அருவறுப்பாக இருக்கிறது என்று கூறியிருந்தார். விவாகரத்து என்பது பரஸ்பரமாக கலந்து பேசி எடுத்த முடிவு. இதில் எந்த அரசியல் சதியும் இல்லை என்று சமந்தாவும் இதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் கொண்டா சுரேகா கூறுகையில், கேடிஆர் குறித்து விமர்சனம் செய்யும் அவசரத்தில் நடிகை சமந்தா குறித்து வாய் தவறி பேசி விட்டேன். எனது பேச்சால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் புண்பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். நடிகை சமந்தா, நாக சைதன்யா குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் கே டி ஆர் குணம், செயல்பாடு குறித்து விமர்சிப்பது மட்டுமே எனது நோக்கம், என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்