- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்த்தியை விவாகரத்து செய்யும் முடிவெடுத்த நடிகர் ஜெயம் ரவி, என் மகன் கோபக்காரன், ஆனா பாசக்காரன்…...

ஆர்த்தியை விவாகரத்து செய்யும் முடிவெடுத்த நடிகர் ஜெயம் ரவி, என் மகன் கோபக்காரன், ஆனா பாசக்காரன்… மருமகள் ஆர்த்தி? – வெளிப்படையாக பேசிய ஜெயம் ரவியின் அம்மா!

- Advertisement -

தமிழ் சினிமா வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசக்கூடிய ஒரு கன்டெண்ட் ஆக இருப்பது நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து விவகாரம்தான். நடிகர் ஜெயம் ரவி முன்னணி நடிகராக இருந்து வருகிறார். பல வெற்றி படங்களை ஆரம்பத்தில் கொடுத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரது படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், அடுத்தடுத்து அவர் வெற்றி படங்களை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற தீபாவளிக்கு சிவா மனசுல சக்தி பட இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கிய பிரதர் என்ற படம் வெளியாகிறது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பூமிகா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அக்கா – தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் நிச்சயமாக ஜெயம்ரவிக்கு வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஜெயம் ரவி கமிட் ஆகி நடித்து வரும் நிலையில், அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வருத்தத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன் ஜெயம் ரவியின் அம்மா ஒரு நேர்காணலில் தனது மகன்கள் குறித்தும் மருமகள்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

அந்த நேர்காணலில் ஜெயம் ரவியின் அம்மா பேசியிருப்பதாவது, என்னுடைய இரண்டு மகன்களும், மருமகள்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இரண்டு மருமகள்களில் யாரைப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டு பேருமே திறமையானவர்கள்தான். என்னுடைய மூத்த மருமகள் ரொம்பவும் பாசமானவர். அதுபோல் இரண்டாவது மருமகள் ஆர்த்தியும் வெளிநாட்டில் படித்திருக்கிறார்.

- Advertisement -

என்னுடைய மூத்த மகன் ராஜா இயக்குனராக இருக்கிறார். இரண்டாவது மகன் ஜெயம் ரவி ரொம்பவும் ஒர்க்கவுட் பண்ணுவான். எனக்கு என்னுடைய இரண்டு மகன்களை எப்போது பார்த்தாலும் இளைத்திருப்பது போல தோன்றும். அதனால் அவர்களை பார்க்கும்போது, என்னடா இளைத்துப் போயிட்டே என கேட்டால், எனது இளைய மகன் ஜெயம் ரவி ரொம்பவுமே கோபப்படுவான். நான் கஷ்டப்பட்டு ஒர்க்அவுட் செய்து உடம்பை குறைச்சிட்டு இருக்கிறேன். நீங்க என்னன்னா இப்படி கேக்குறீங்க என்று கோபப்படுவான்.

நான் இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று சாப்பாடு வச்சா கூட வேண்டாம்மா, இதுவே போதும், வெயிட் போட்டு விடும் என்று பயப்படுவான். என்னுடைய மகன்கள் இப்போதும் வெளியே போகும்போது, என்னிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு தான் வெளியே போவாங்க. எந்த இடத்திலும் எங்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்று ரொம்பவும் யோசிப்பாங்க என்று அந்த பேட்டியில் ஜெயம் ரவியின் அம்மா எமோஷனலாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்