- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட என்னங்க இன்னும் உங்கள் கலெக்சன் கதை முடியலையா... நாளைக்கு ரஜினி படம் ரிலீஸ்... இன்னைக்கு...

அட என்னங்க இன்னும் உங்கள் கலெக்சன் கதை முடியலையா… நாளைக்கு ரஜினி படம் ரிலீஸ்… இன்னைக்கு விஜய் படத்திற்கான கலெக்சன் கணக்கை காட்டிய தயாரிப்பு நிறுவனம்…

- Advertisement -

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம், கடந்த மாதம் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம், அதனை சரியாக பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம்.

 

- Advertisement -

பெரிய கலவையான விமர்சனத்தை அது சந்திக்கவில்லை என்றாலும், கோட் திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரவில்லை என்ற உண்மையை இங்கு கூறி தான் ஆக வேண்டும். இருப்பினும் விஜய் ரசிகர்களையும், குடும்ப ஆடியன்ஸ்களையும் திருப்திப்படுத்தி இருந்தார் வெங்கட் பிரபு.

 

- Advertisement -

குறிப்பாக மகனாக வரும் ஜீவன் கதாபாத்திரத்தின் கேரக்டர், ரசிகர்களை கவரும் வகையிலேயே எழுதப்பட்டிருந்தது. அதில் நடித்த விஜய்யும், கலகலப்பான கதாபாத்திரமாக நடித்து அதில் தனது வில்லத்தனத்தையும் காட்டி இருந்தார். படத்தின் இறுதி காட்சியும் பலரும் இயக்கும் வகையில் இருந்தது.

 

இடைவேளைக்குப் பிறகு ரசிகர்கள் இருக்கையில் சற்று நெளிந்த போது, விறுவிறுப்பாக இறுதிக்காட்சிக்கு அழைத்து வந்து படத்தை நன்றாக முடித்தார் வெங்கட் பிரபு. குறிப்பாக சிவகார்த்திகேயன் வருகை, திரிஷாவின் குத்தாட்டம் உள்ளிட்டவை படத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவே இருந்தது.

 

அதுவும் கிரிக்கெட் மைதானத்தில், இறுதியில் மங்காத்தா தீம் இடம் பிடித்திருந்தது அஜித் ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் தேவையில்லாத இடங்களில் வந்த பாடல்கள் தான் அதன் வேக ஓட்டத்திற்கு தடையாக அமைந்தன. யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவில்லை.

 

தற்போது கோட் திரைப்படம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. இப்படியான சூழலில் தான், கோட் திரைப்படம் உலகம் முழுவதும் 455 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகும் சூழலில், அதன் முன்பதிவு கோட் திரைப்படத்தைப் போல இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் தான், அர்ச்சனா கல்பாத்தியின் இந்த பதிவு இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்