ரஜினிகாந்த் – ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் உலகமெங்கும் இன்று வெளியாகி உள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து, ஞானவேல் ரஜினியுடன் இணைந்ததால் இந்த திரைப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
அது மட்டுமல்லாமல் அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில் என பெரும் நட்சத்திர பட்டாளம் இருந்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தது. ஆனால் படத்தின், டீசரும் ட்ரெய்லரும் அதன் எதிர்பார்ப்பை குறைக்க செய்தன. படத்தின் ரிலீசும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.
ஆன்லைனில் டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக நடைபெற்றாலும், முந்தைய திரைப்படங்களின் எதிர்பார்ப்பு இல்லை என்று பெரும்பாலான கருத்துக்கள் நிலவி வந்தன. இப்படியான சூழலில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. முதல் பாதி மிக நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சுமாராக உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேசமயம், நாயகப் பிம்பத்தை தாண்டி படத்தின் கதையின் கான்செப்ட்டை மையமாக வைத்தே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றன. மிக முக்கியமாக பகத் பாசிலின் நடிப்பு மிக அருமையாக இருப்பதாகவும், முக்கியமான காட்சிகளை அவர் தாங்கி பிடித்து செல்வதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் குறைந்ததே, படத்திற்கான கலவையான விமர்சனம் வருவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் பல முக்கிய நட்சத்திரங்களும் வேட்டையன் படத்தின் முதல் நாளை திரையரங்குகளில் கண்டுபிடித்துள்ளனர். மிக முக்கியமாக நடிகர் விஜய் தேவி திரையரங்கில் வேட்டையன் திரைப்படத்தை பார்த்திருக்கிறார்.
இதேபோல் நடிகர் தனுஷும் வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை திரையரங்கில் கண்டு களித்துள்ளார். அவர் வேட்டையன் திரைப்படத்தை பார்த்த அதே திரையரங்கில் தான், ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா பார்த்திருக்கிறார். இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருக்கும் சூழலில், அவர்கள் மீண்டும் இணைய போவதாக தகவல் வெளியானது. இப்படியான சூழலில் தான் இருவரும் ஒரே திரையரங்கில் படத்தை பார்த்ததற்கான தகவல் வெளியாகி இருக்கிறது.





