- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடைக்காக டீ கிளாஸுடன் போஸ் கொடுத்த தனுஷ் - நித்யா மேனன்... திருச்சிற்றம்பலத்தை தொடர்ந்து...

இட்லி கடைக்காக டீ கிளாஸுடன் போஸ் கொடுத்த தனுஷ் – நித்யா மேனன்… திருச்சிற்றம்பலத்தை தொடர்ந்து பலமாக அமைந்த கூட்டணி… திரும்பிப் பார்க்கும் கோலிவுட்…

- Advertisement -

நடிகர் தனுஷிற்கு நடப்பாண்டு மட்டும் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி விட்டன. இதில் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

 

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்தப் படத்தை தனுஷ் இயக்கி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

 

- Advertisement -

வசூலில் மாயாஜாலம் காட்டினாலும், விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. பழைய கதையை தனுஷ் எடுத்திருப்பதாகவும், இரண்டாம் பாதியில் அண்ணன் தம்பி சண்டை சலிப்பூட்டியதாகவும் பலர் கூறினர். குறிப்பாக ஓ டி டி தளத்தில் இந்த திரைப்படம் வெளியான பிறகு, ராயன் இணையதள வாசிகளுக்கு ட்ரோல் மெட்டீரியல் ஆனது.

 

இதற்கு பேசாமல் தனுஷ் நடிப்பின் மேலே கவனம் செலுத்தலாம் என்று பலர் கிண்டலடித்தனர். ஆனால் இதையெல்லாம் பெரிது படுத்தாத நடிகர், தனது அடுத்த திரைப்படத்தையும் இயக்கி முடித்தார். இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 

தனுஷின் மருமகன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படம், விரைவில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த படத்திற்கு, இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதனையும் தனுசே இயக்கி நடிக்கிறார்.

 

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் கையில் டீ கிளாஸ் உடன், புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். இது வைரலாகி வரும் நிலையில், இந்த திருச்சிற்றம்பலம் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்