- Advertisement -
Homeபொழுதுபோக்குமும்பை ராசி இந்தளவுக்கு வேலை செய்கிறதா? அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறாரா நடிகர் ஜெயம் ரவி?...

மும்பை ராசி இந்தளவுக்கு வேலை செய்கிறதா? அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறாரா நடிகர் ஜெயம் ரவி? அவரே சொன்ன தகவல்தான் இது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது அப்பா எடிட்டர் மோகன், அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இருவருமே சினிமா துறையில் பிரபலங்கள்தான். அதேபோல் ஜெயம் ரவியும் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். துவக்கத்தில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவி, ஒரு கட்டத்துக்கு பிறகு தோல்வி படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக ஜெயம் ரவி நடித்த அகிலன், இறைவன், சைரன் 108 போன்ற படங்கள் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. வருகிற தீபாவளிக்கு அவரது பிரதர் படம் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து 3 படங்களில் நடிக்க ஜெயம் ரவி கமிட்டாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சொந்த வாழ்க்கையில் சில மோசமான சறுக்கல்களை சந்தித்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவித்து விட்டார். மேலும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து செய்யக் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். விரைவில் அது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள பிரதர் படத்தில் ஜெயம் ரவி, கதாநாயகனாகவும், பிரியங்கா அருள் மோகன் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் பூமியா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இந்த படத்தை தயாரித்துள்ளது. பிரதர் படத்தை தொடர்ந்து அடுத்து ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.

- Advertisement -

சமீபத்தில் பிரதர் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி கூறுகையில், இந்தியில் சில கதைகளை கேட்டிருக்கிறேன். விரைவில் இந்தி படத்தில் நடிக்க இருக்கிறேன். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பணியாற்ற ஆசைப்படுகிறேன். அவரும் கண்டிப்பாக நாம் இணைந்து பணியாற்றலாம் என்று கூறி இருக்கிறார். அவர் எழுதிய கதை ஒன்றை நான் இன்னும் சில வாரங்களில் கேட்க இருக்கிறேன், என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.

அதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் அல்லது வெற்றிமாறன் எழுதிய கதையில் ஜெயம் ரவி நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. மிக விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து கணேஷ் பாபு இயக்கும் ஒரு படத்திலும், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ஒரு படத்திலும் ஜெயம்ரவி நடிக்க இருக்கிறார். சமீபத்தில்தான் ஜெயம் ரவி மும்பையில் குடியேறினார். மும்பையில் குடியேறிய பிறகு ஜெயம் ரவி தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வருவது மும்பை ராசியாக இருக்கும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்