நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முதல் பாகமாக கங்குவா படம் வெளிவர உள்ள நிலையில், அடுத்ததாக அடுத்த ஆண்டுக்குள் இந்த படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ரசிகர்களுக்கு கங்குவா படம் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. அதன்பிறகு இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நடிகர் சூர்யா, இயக்குனர் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து சூர்யா 45 என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.
நடிகரும், இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி ஏற்கனவே மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை தந்தவர் என்பதால் இந்த படத்தில் சூர்யாவுடன் ஆர்கே பாலாஜி கைகோர்ப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைப்பதும் உறுதியாகி விட்டது.
மேலும் இந்த படத்தின் கதை ஏற்கனவே நடிகர் விஜய்க்காக சொல்லப்பட்ட கதை தான் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இப்போது இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69 வது படத்தை, முதலில் ஆர்.ஜே பாலாஜி இயக்குவதாக இருந்தது. அப்போது விஜயிடம் ஆர்ஜே பாலாஜி சொன்ன கதைதான் இப்போது சூர்யா நடிக்கும் 45வது படத்தின் கதை என்று ஏற்கனவே தகவல் வெளியானது.
நடிகர் விஜய் நடிக்க மறுத்த அந்த கதையில்தான் சூர்யா நடிக்கிறாரா என்று ஒரு விமர்சனமும் இருந்து வரும் நிலையில், இந்த படம் உருவாகிறது. சூர்யா 45 படத்துக்கு ஹிண்ட் ( HIND) என்ற பெயர் தற்காலிக பெயராக வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போகிறவர் பெயர் கஷ்மீரா பர்தேசி என்று கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தில் ஜீவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்தவர். மேலும் ஆதி நடித்த அன்பறிவு படத்திலும், பிடி சார் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்த நடிகையாகவும் கஷ்மீரா பர்தேசி இருக்கிறார். அவரது சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட விவரங்கள் இப்போது பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





