- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தங்கலான் படம், 10 வாரங்கள் தாமதமாக வெளிவரக் காரணம் என்ன?...

விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தங்கலான் படம், 10 வாரங்கள் தாமதமாக வெளிவரக் காரணம் என்ன? தங்கலானுக்கு கிடுக்கிப்பிடி போட்ட ஓடிடி தளம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக, முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் சியான் விக்ரம். கமல்ஹாசனுக்கு அடுத்தப்படியாக நடிகர் விக்ரம் நடிப்பில் பல சிகரங்களை தொட்டவர். நடிக்கும் கேரக்டருக்காக கமலை போலவே மெனக்கெடும் சிறந்த கலைஞர். எந்த பாத்திரம் என்றாலும் அதில் 100 சதவீதம் தன் உழைப்பை தருபவர். அதற்காக உடல் ரீதியாக, மன ரீதியாக தன்னை வருத்திக்கொள்ள தயங்காதவர்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான படம் தங்கலான். இந்த படத்தில் சியான் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தங்கலான் படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். தங்கவயல் சுரங்கத்தை பற்றிய இந்த படம் ரசிகர்களை பெரிய அளவில் திருப்திப்படுத்தவில்லை.

- Advertisement -

குறிப்பாக விக்ரம் நடிப்பில் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தாலும், கதை மற்றும் திரைக்கதை, கதைக்களத்தில் இயக்கத்தில் பா ரஞ்சித் பெரிய அளவில் சொதப்பி விட்டதாக புகார் எழுந்தது. பல இடங்களில் காட்சியமைப்பும் புரியாமல், கதை வசனங்களும் புரியாமல் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த சூழலில், தங்கலான் படத்துக்கு இதுவரை சேட்டிலைட் ரைட்ஸ் யாருமே வாங்கவில்லை. அதே நேரத்தில் தங்கலான் படத்தை, ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ. 48 கோடி என்ற விலைக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கி விட்டது. ஆனால் தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் தங்கலான் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால், இந்த படத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட மறுத்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

அதே வேளையில் தங்கலான் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசுகையில், தங்கலான் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீஸ் செய்வோம் என்று கூறியிருந்தார். ஆனால் நெட்பிளிக்ஸ் தரப்பில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸான தங்கலான் படம், ஓடிடி தளத்தில் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வாக்கில், 4 வாரங்களில் ரிலீஸாகி இருக்க வேண்டும். ஆனால் தீபாவளிக்கு வருகிற 31ம் தேதி ரிலீஸாகிறது என்றால் ஏறக்குறைய 10 வாரங்களாகி விடுகிறது. அதுமட்டுமின்றி ரூ. 48 கோடிக்கு தங்கலான் படத்தின் டிஜிட்டல் உரிமம் பெற்ற நெட்பிளிக்ஸ் ரூ. 12 கோடி விலையை குறைத்து, ரூ. 36 கோடிக்கு ஓடிடியில் ரிலீஸ் செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பல இழுபறிகளுக்கு இடையில்தான் தங்கலான் போராடி நெட்பிளிக்ஸில் தீபாவளிக்கு வெளியாகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்